Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தனுஷ், அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வேலையில்லாப் பட்டதாரி படத்திற்கு ஏற்கனவே பல எதிர்ப்புகள் வந்தன. 
 
இப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி பலரின் எதிர்ப்பை பெற்றது, அனைவரும் அறிந்ததே. ஒருவாறு அதை சமாளித்து, படம் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் இச்சந்தர்பத்தில் மீண்டும் ஒரு புது சர்ச்சை. 
இப்படத்தில், வேலையில்லாத தனுஷ் தன் தந்தையிடம் என்னை நீங்கள் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிக்க வைத்ததால் தான் எனக்கு வேலையில்லை, தம்பியை ஜோன் கல்லூரில் படிக்க வைத்ததால் தான் வேலை கிடைத்திருப்பதாக, ஒரு வசனம் அமைந்துள்ளது, 
 
இது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளை அவதூறுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சைகள் எழும்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் நடைபெறுகின்றன. ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், உடனடியாக அவ்வசனத்தை நீக்க வேண்டும் என, தனுஷிற்கு கண்டனக் கடிதங்களும் அனுப்பி வருகின்றனர்.
 
VIP தனுஷ் சுனாமியிலேயே ஸ்விமிங் போடுபவர்; இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறார் பார்ப்போம்...
412 Views
இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னர் கடமையாற்றியவர்.
அதன் பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்ட இழுபறிகள், குளறுபடிகள் காரணமாக அவுஸ்திரேலியாவின் Big Bash Leage அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக சிறப்பாக செயற்பட்ட இவரது திறமையைக் கண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இவரைத் தனது பயிற்றுவிப்பாளாராக வளைத்துப்போட்டது.
 
ஹதுரு பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளர் ஆன பின்னர், இலங்கையின் முக்கிய காய்கள் மீது அவரது சிபாரிசில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனம் திரும்பும் என சூரியன் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்திருந்தோம்.
 
இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது.
 
உள்ளூர் அனுபவத்தை வைத்து நீண்டகாலமாக அடிப்படையிலிருந்து கட்டியெழுப்பபட்டு வந்த இலங்கையின் பயிற்றுவிப்புக் குழாமின் இரு முக்கிய தூண்கள் வங்கப் பக்கம் நகர்வதாகத் தெரியவந்துள்ளது.இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ருவான் கல்பகேயும், சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்கவும் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தனர்.
 
இவர்கள் இருவருமே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
 
உறுதியான ஒப்பந்தம், நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை விட நம்பிக்கையான ஊதியம் + வசதிகள் வழங்கப்படுவதால் இவர்களது வெளியேறல் உறுதி போலவே தெரிகிறது.
 
நிரந்தர பயிற்றுவிப்பாளர் ஒருவரை பாகிஸ்தானிய தொடரின் பின் இலங்கை தேடவிருப்பதைப் போல, இந்தப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களைத் தேடவேண்டி இருக்கும்.
 
இன்று இவர்கள் இருவரையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
இது ஏதாவது நல்ல முடிவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து தான் அறிந்துகொள்ள முடியும்.
 
3,238 Views
அண்மைக் காலமாக தான் இசையமைக்கும் திரைப்படங்களில் கூட முன்னர் போல  பின்னணி பாடுவதில்லை இசைஞானி இளையராஜா. எதற்காக இந்த கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாரோ தெரியாது. 
           அப்படிப்பட்ட ஒருவரை சீனு ராமசாமி இயக்கி வளர்ந்து வரும் இடம் பொருள் ஏவல் படத்தில், பாடல் ஒன்றை பாடவைக்க அவரது இளைய மகன் யுவன் சங்கர்ராஜா முயன்று வருகிறார். யுவன் இசையில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் வைரமுத்து எழுதியுள்ள குறித்த பாடலை இசைஞானி பாடுவாரா என்று எதிர்பார்த்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஏமாற்றம் கொடுத்திருந்தார் இசைஞானி.
 
வைரமுத்துவின் பாடலை தான் பாடவில்லை என்பதை தன் ரசிகர் மன்ற மூலமாக அறிவித்திருந்தார் இளையராஜா.

    இந்நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில், யுவனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நம்ம கொலைவெறி புகழ் தனுஷ் தான். 

   தனது பாடலை இசைஞானி பாடியிருப்பது பற்றி அதீத புளகாங்கிதத்தை வெளிபடுத்தும் தனுஷ், தனது சமூக வலைத்தளம் ஒன்றில் , நான் எத்தனை பாடல்களை எழுதியிருந்தாலும், எனது இந்தப் பாடலை இளையராஜா பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 
அடிக்கிறதெல்லாம் சிக்சர், பிடிக்கிறதெல்லாம் பெரிய இடமாக பிடிக்கிறார் தனுஷ்.

ஹ்ம்ம் ... வாழ்த்துக்கள் தனுஷ் !
219 Views
மாபெரும் ரசிகர் சமுத்திரத்துடன் நடந்த மிக வெற்றிகரமான சூரியன் மெகா பிளாஸ்ட்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கம் முழுவதும் நிறைந்து வழிந்த அளவு சூரியன் ரசிகர்களோடு சனிக்கிழமை (26ஆம் திகதி) இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல நட்சத்திரங்கள் M.K.பாலாஜி, ஷர்மிளா, பிரபு ஆகியோரோடு இலங்கையின் பிரபல இசைக்குழுவான K.கருணாவின் 'சரிகம'வின் இசையில் இலங்கையின் பிரபல உள்ளூர்க் கலைஞர்களும் கலந்து சிறப்பித்த மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இது.

சென்சேஷன் நடனக் குழுவின் கண்கவர் நடனங்கள், வாண வேடிக்கை, ஒளிவிளக்கு அலங்காரங்கள், பிரம்மாண்டமான மேடை அமைப்பு என்று இலங்கையில் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான பெரும் இசை விழாவாக சூரியன் மெகா பிளாஸ்ட் இடம்பெற்றது.

யாழ்ப்பாண சூரிய நேயர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் வந்திருந்த சூரிய ரசிகர்களால் யாழ்ப்பாணம் நகர் முழுவதும் நிறைந்து ஒரு கொண்டாட்டமான தோற்றத்தை வழங்கியிருந்தது.

எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அதிகாலை 1.45 வரை நடந்த சூரியன் மெகா பிளாஸ்ட் யாழ்ப்பாணத்தில் இதுவரை நடந்த இசை நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய ரசிகர்கள் திரண்ட நிகழ்ச்சி என்று சகலராலும் பெருமையாகப் பேசப்படுகிறது.


Click here for Photo Album 1

Click here for Photo Album 2


9,426 Views
சூரியனின்  16வது பிறந்ததின கோலாகல கொண்டாட்டங்கள் இன்று காலை சூரியனின் அலுவலகத்தில் ஆரம்பித்தது. சமய வழிபாடுகளோடு   தொடங்கிய நிகழ்வில், ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு.ரெய்னோர் சில்வா தலைமை தாங்கி நிகழ்வுகளை அலங்கரித்தார்.

அவரோடு அரவிந்த லொக்குகே, தம்மிக பண்டார தென்னக்கோன், சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் ஏனைய உயரதிகாரிகளும் மாத்திரமில்லாமல், சூரியனின் பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு மெகா ப்ளாஷ்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான எம்.கே.பாலாஜி, சர்மிளா, பிரபு ஆகியோரும் சூரியக் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பித்தார்கள்.

மதியப் பொழுதில் சூரியனோடு இணைந்திருக்கும் நேய சொந்தங்களுக்காக, உள்ளக கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சரிகம கருணாவின் இசைநிகழ்ச்சி  காற்றலையில் நேரலையாக கலந்து இன்னும் பிரமிப்பை அதிகமாக்கியது.

அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், அன்போடு நிறைந்த நேயர் கூட்டம், மகிழ்ச்சித் திளைப்பின் உச்சியில் முதல்தர வானொலி சூரியன் தனது 16வது அகவை நிறைவை இன்று அலுவலகத்தில் கொண்டாடியது ஒரு சிறப்பெனில், இன்னொரு அசத்தலான சிறப்பு நாளையும் நிகழவுள்ளது.

நம் பாரம்பரியம் பேசும் யாழ் மண்ணில்
மெகா ப்ளாஸ்ட் எனும் நாமத்தோடு - அதிரடி இசை பிரவாகம்

Sooriyan FM 16th Anniversary Celebration - Office Party

320 Views
ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் பகுதி, ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.

இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே 'உலகின் கடைசி பகுதி' - End of World என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும்  மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.இதன் ஆழம் 262அடியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த வாரம் ரஷ்யாவில் திடீரென ஏற்பட்ட பனிக்கட்டி மழைப் பொழிவு அச்சம் ஏற்படுத்திய பரபரப்பின் பின்னர் இப்போது இந்தப் பள்ளம்.. 

இந்த திடீர்ப் பள்ளத்தின் அதிசய காணொளி இணைப்பு 

ரஷ்யாவில் திடீரெனத் தோன்றிய பள்ளம்.. - உலக அழிவின் ஆரம்பம்? அதிசய காணொளி 
30,353 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடமிட்டு ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து 2010இல் வெளிவந்த திரைப்படம் எந்திரன். ஷங்கர் படத்தினை இயக்கியிருந்தார். தனக்கு வில்லனாக ரஜினியே வந்திருந்தார். 
பிரம்மாண்டமான தயாரிப்பு, மாபெரும் வெற்றி.
   இது நமக்கு தெரிந்த செய்திதான்!

புதிய தகவல் என்ன என்றால், எந்திரன் பாகம் 2 தயாராகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் ஷங்கர் எந்திரன் பாகம் 2 க்கான கதையினை தயாரித்து முடித்துள்ளார்.

இப்பொழுது லிங்கா படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்தவுடன், எந்திரன் 2இன் வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதையில், வில்லனாக ரஜினி நடித்த பாத்திரத்துக்கு இம்முறை வேறு ஒரு பிரபலமான நடிகரை நடிக்க வைத்து இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்து வியாபாரத்தை விரிவாக்கும் திட்டத்தில் இறங்கிய ஷங்கர், வில்லன்னுக்கான நடிகர் தேர்வுகளை நடத்தியுள்ளார். இறுதியில் ஹிந்தி நடிகர் அமீர்கானை சங்கர் தெரிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

எந்திரன் 2 தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வர இருக்கிறது. எனவே, ஹிந்தியில் பிரபலமான அமீர்கானை இப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலமாக, எந்திரன் 2 ஹிந்தியிலும் அமோக வரவேற்போடு அரங்கம் நிறைக்கும் திரைப்படமாக மாறும் என்பது ஷங்கரின் கணக்கு. 
 
ஆச்சரியப்படும் விதத்தில் அமீர்கானும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
வித்தியாசமான திரைக் கதைகளையும் சவாலான பாத்திரங்களையும் தேடித் திரியும் அமீர் கானுக்கு இது பரம திருப்தியை அளித்திருக்கிறதாம்.
 
எனினும் அமீர்கான் தரப்பிலிருந்து இது பற்றி உத்தியோகபூர்வ செய்திகள் இதுவரை வரவில்லை.

ஏனைய நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 
-இன்னும் யாரெல்லாம் இப்படத்தில் வரப்போகிறார்கள் என்று பார்ப்போமே! 
 
ஆனால் லிங்கா 2 படப்பிடிப்பில் ரஜினி நேற்று மயங்கி விழுந்தது தான் இப்போது பலரையும் கலவரப்படுத்தியிருக்கிறது.
391 Views
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜிம்மி அன்டர்சன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை அவதூறு செய்தார் ; தள்ளிவிட்டார் என்ற சிக்கலில் தண்டனையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது இன்னொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு சிக்கல் தேடி வந்துள்ளது.
 
இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக அண்மைக்காலத்தில் தன்னை நிரூபித்து பிரகாசிக்க ஆரம்பித்துள்ள கரி பலன்ஸ் தான் புதிய சர்ச்சையில் அகப்பட்டுள்ள புதிய குழப்படிகாரர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்திய - இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் நொட்டிங்காம் பிரதேசத்திலுள்ள க்ளப் ஒன்றுக்கு சென்றுள்ள இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட், ஜிம்மி அண்டர்சன் (இவர் ஏற்கெனவே சிக்கலில் மாட்டியுள்ளவர்), லயம் பிளங்கட் ஆகியோரோடு மது அருந்திய பலன்ஸ், கொஞ்ச நேரத்துக்குப் பின் நிதானம் தவறியவராக தனது மேற்சட்டையைக் கழற்றி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.
 
"இங்கிலாந்து, இங்கிலாந்து " என்று கூச்சல் போட்டுக்கொண்டே உற்சாக மிகுதியால் கூத்தாடிய பலன்ஸ் இறுதியில் நிறை போதையில் மற்றவர்களால் தூக்கிச் செல்லப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
 
இதுபற்றி அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை பலன்சுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது. 
5,140 Views
அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் போது இடம்பெற்ற அசம்பாவிதமே இது.. நடிகை பத்மப்பிரியா இயக்குனர் சேரனுடன் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தில் நடித்தவர், அதை தொடர்ந்து 'பட்டியல்' , 'சத்தம் போடாதே', 'மிருகம்', 'பொக்கிஷம்', 'இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்' , 'தங்கமீன்கள்'  போன்ற படங்களில் நடித்திருந்தார். 
ண்மையில் பிரம்மன் திரைபடத்தில் ஒரு பாடலுக்கு குத்து நடனம் போட்டிருந்த இவர் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்கியிருந்தார்.

 இந்தசந்தர்ப்பத்தில் பிரபலங்களை மேடைக்கு அழைக்கும் போது இரண்டு மூன்று தடவைகள் இயக்குனர் இமயம் பாரதிராஜாவைப் பார்த்து திரு. பாக்கியராஜ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என்று அழைத்திருக்கின்றார். இது இரு முறை நடந்திருக்கிறது, உடனேயே ஒரு ஓரமாக அமர்ந்திருந்த பாக்கியராஜ் அவர்கள் 'அம்மா நா தான்மா பாக்கியராஜ் அவர் பாரதிராஜா" என கூறியும் பத்மபிரியா தொடர்ந்து அதே தவறை செய்துள்ளார். 
 
இது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பத்து ஆண்டு காலமாக சினிமாவிலுள்ள இவருக்கு பாரதிராஜாவையும், பாக்யராஜையும் அடையாளம் தெரியாமல் இருந்தமை என்பது அனைவரின் கோபப்பார்வையையும் பத்மபிரியாவின் பக்கம் திருப்பியது. இது இவ்வாறிருக்க இவருடன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சக தொகுப்பாளர், இயக்குனர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜாவைப் பார்த்து 'இயக்குனர் சிகரம்' என்று அழைத்துள்ளார் இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்ற ஒரு சம்பவமாக அமைந்துள்ளது.சச்சின் டென்டுல்கரைத் தெரியாது என்று சொன்ன மரியா ஷரப்போவாவாவது ரஷ்யாவைச் சேர்ந்தவர்.
 
தமிழ் உலகமே அறிந்த இரு இயக்குனர்களைத் தெரியாமலே பத்து வருடங்களாக சினிமாவில் குப்பை கொட்டும் இவரை என்னவென்பது?

இன்னொரு சுவாரஸ்ய விஷயம் இன்று இயக்குனர் இமயத்தின் பிறந்தநாள்.
288 Views

ஜெர்மானியர்கள் அதிர்ஷ்டங்கள் தரும் சகுனங்கள், அதிர்ஷ்ட இலக்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்.

இம்முறை தமது நாட்டு அணி உலகக்கிண்ணம் வென்றதற்கு 7ஆம் இஇலக்க அதிர்ஷ்டம் ஒரு முக்கிய காரணம் என நம்புகிறார்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் ஜெர்மானியர்கள்.

தமது 4வது வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ஜேர்மனிக்கு எண் 7 அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருந்தது  எப்படி எனப் பார்ப்போம்...

* ஆண்டு 2014 ஐ கூட்டினால் வருவது 7 ஆகும்
* மாதம் - ஜூலை (7)
* GERMANY என்ற எழுத்துகளின் எண்ணிக்கை 7.
* போட்டி நடந்த நாடு BRAZIL =2+2+1+7+1+3 = 1+6 = 7
* ஜேர்மன் அணி G பிரிவில் போட்டியிட்டது. ஆங்கில அகரவரிசைப்படி G என்பது 7ஆவது எழுத்தாகும்.
* இம்முறை அதிக கோல்களை ஜேர்மன் அணி பெற்றது பிரேசிலுடன் (7 – 1) ஆகும்.
* வெற்றிக் கோலை பெற்றுத் தந்த Mario Gotze மாற்று வீரராக களமிறக்கப்பட்டது 88ஆவது நிமிடத்தில் ஆகும். 8+8 =1+6 = 7
* அவரது பெயரின் முதலெழுத்துகளைக் கூட்டினால் வருவது M + G = 7 ஆகும்.

என்ன அசந்து விட்டீர்களா?

 
300 Views
ஜேர்மனியின் 4வது உலகக்கிண்ணம்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் கிண்ணம் வென்ற ஒரே ஐரோப்பிய அணி.
24 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.
இப்போது ஜேர்மனி  அணி உலகக்கிண்ணப் போட்டிகளில் 
4 தடவை சம்பியன் 
4 தடவை இரண்டாமிடம் 
4 தடவை மூன்றாமிடம்.
உலகக்கிண்ண கோல் சாதனையாளர் மிரோஸ்லாவ் க்லோசேக்கு உலகக்கிண்ண வெற்றியுடன் விடை கொடுத்துள்ள அணி ஆர்ஜென்டீனிய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தென் அமெரிக்க ரசிகர்களுக்கே கவலையைக் கொடுத்துவிட்டு (அடுத்தடுத்து பிரேசில் & ஆர்ஜென்டீன அணிகளுக்குத் தோல்வி) கிண்ணத்தோடு வெற்றியுலா புறப்பட்டுள்ளது.கொட்செயின் 113வது நிமிட கோல் விட்டுக் கொடுக்காமல் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த இரு அணிகளில் ஜேர்மனியை உலக சம்பியனாக்கியது.
 
வாழ்த்துக்கள் ஜேர்மனி.அடுத்த உலகக்கிண்ணம் 2018இல் ரஷ்யாவில் நடைபெறும் வரை சம்பியன்கள் இந்தத் தகுதிவாய்ந்த வீரர்களே.317 Views
உலகக்கிண்ண அரையிறுதியில் இன்று அதிகாலை ஜேர்மனிய அணியிடம் பிரேசில் 7 - 1 என்ற கணக்கில் கண்ட படுதோல்வியானது கடுமையான் விமர்சனங்களை ஒருபக்கம் பிரேசிலுக்கு எதிராகக் கிளப்பி விட்டுள்ளது.
 
பிரேசில் தங்கள் கால்பந்தாட்ட வரலாற்றில் கண்ட இந்த மாபெரும் தோல்வி உலகளாவிய ரீதியில் பிரேசில் ரசிகர்களை மிகப் பாதித்துள்ளது.
 
குறிப்பாக பிரேசிலின் இப்படியான ஒரு மோசமான தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் தேம்பியழும் காட்சிகள் உலகம் முழுதும் பலரையும் உருக வைத்துள்ளது.
 
பிரேசிலில் கால்பந்து இரத்தத்திலேயே கலந்திருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்?


313 Views
பீட்ஸா படத்தின் மூலமாக பிரபலமாகி பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, இப்பொழுது 6 புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 யாருக்கும் அமையாத அமோக வரவேற்பு இவருக்கு நம்ம இரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளமை  இவரின் நடிப்புக்கு கிடைத்த விருது என்றுதான் சொல்ல வேண்டும். 
 
 இப்போ விஷயம் என்னன்னா, சூதுகவ்வும் படத்தில் ஒரு இளம்பெண்ணை காரில் விஜய்சேதுபதி கடத்த முயற்சிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கப்பட்டது. 
 
இந்நிகழ்வில், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 
இப்போதுள்ள நடிகைகளில், யாரை நீங்கள் கடத்துவீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு சலனமும் இல்லாமல் உடனே "நயன்தாரா" என்றார் விஜய் சேதுபதி. 
இவர் சட்டென்று மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவரென்றும் பெயர் எடுத்திருக்கிறார்.
 
ஓஹோ! கதை அப்பிடி போகுதா என்றவர்களுக்கு எல்லாம் பதிலையும் அவரே வழங்கியிருக்கிறார்.  
 
"நயன்தாரா நல்ல நடிகை. திறமையாக நடிக்க கூடியவர். அவரோடு ஜோடியாக நடிக்க எனக்கும் ஆர்வமுள்ளது" என்று , கதை கட்ட காத்திருந்தவர்களுக்கு அவரே முற்றுப்புள்ளியிட்டிருக்கிறார்.
 
பரவால்லை , நீங்க தேறிட்டீங்க சேதுபதி ப்பாஹ் !!!!
241 Views

சும்மாவே மோதிக் கொள்கிற அஜித் - விஜய் ரசிகர்களை மேலும் கலவரப்படுத்தும் செய்தியா என்று திகைக்காமல் மேலும் வாசியுங்கள்.

'தல' அஜித் நடிக்கும் புதிய படம் பற்றி நாள்தோறும் புதிது புதிதாய் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. 

இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள் என்று தகவல்கள் வந்திருந்தன.

மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

இப்படத்தில் அருண் விஜய்க்கு என்ன பாத்திரம் என இத்தனை நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வந்தது. 

ஒருவேளை ஆரம்பம் ஆர்யா போல துணை பாத்திரம் ஏதாவதோ என ஊகங்களும் நிலவியிருந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியொன்றின் திரைப்பட விருது விழாவில், ‘ஆரம்பம்’ படத்திற்காக விருது வாங்க மேடையேறிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அந்த சஸ்பென்ஸை உடைத்தார்.

 ‘‘அஜித்துடன் இரண்டு படம் செய்கிறோம். ஏற்கெனவே ஒருமுறை கௌதம் மேனனுடன் நான் படம் செய்வதாக இருந்தது. ஆனால், அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது. அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை’’ என்று கூறினார் ஏ.எம்.ரத்னம்.

ஆக.... அருண் விஜய், அஜித்துக்கு வில்லன்தான் என்பது உறுதியாகிவிட்டது!

​(அட இந்த விஜய்யா என்று கடுப்பாகாதீங்க சொந்தங்களே)​
 
425 Views
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக ஹீரோ என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. 
அவர் நடித்து வரும் படங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை, மக்கள் மத்தியில் இதன் காரணமாகவோ என்னவோ தனியான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.  
 
வழக்கமான கதைகளை தவிர்த்து மாறுபட்ட கதைகளில் நடித்து வரும் இவர், தற்போது தானே தயாரித்து நடித்து வரும் 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் 55 வயது தாத்தாவாக நடித்து வருகிறார். 
 
அதற்காக தனது நரை விழுந்த தலைமுடியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி, தனது தோற்றம் உடலமைப்பு என அனைத்தையும் 55 வயது முதியவரை போலவே தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். 
 
இந்த படத்தில் தனது ஒவ்வொரு அசைவினையும் வித்தியாசப்படுத்தியுள்ளார் சேதுபதி. இது தொடர்பில் அவர் கூறுகையில் "படத்தின் வெற்றிமட்டுமல்ல ஒவ்வொரு காட்சிகளும் எனக்கு திருப்தியாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என கூறியுள்ளார். மேலும் நானும் ஒரு ரசிகன் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்" எனவும் கூறியுள்ளார். 
 
 
3,569 Views
[1]      «      1512   |   1513   |   1514      »      [1521]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top