இது பேய்ப்படங்களின் சீஸன். இதோ இன்னொரு பேய்ப்படம் பற்றிய தகவல்.
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குப் படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பீருவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதல்முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார்.
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி அடுத்த வருடம் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி, தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் கார்த்தி, நாகார்ஜூனா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் அனுஷ்கா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக ஒருசில ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனம் மறுத்துள்ளது.