Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்து, ரசிகர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் அஜித்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இனம்தெரியாத நபர் ஒருவரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது, 
 
இதனையடுத்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் பொலிசார் சோதனை செய்து பார்த்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிசெய்திருந்தனர். இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், மிரட்டல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, மதுரையிலுள்ள 'தல' யின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ' வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்....' என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
இதே மாதிரி ஒரு வெடிகுண்டு விஷயம் தான் 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவின் பின்னர் ரஜினியை அரசாங்கத்தோடு மோத வைத்து, அரசியல் சாயத்தை ரஜினி மேல் பூச ஆரம்பித்தது.
இப்போது அமைதியாக இருக்கும் அஜித்...
ஏதோ பார்த்து நடந்துகொள்ளட்டும்.

தல 55 - புத்தம்புதிய படங்கள்

519 Views

 ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில், வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி நடிக்கும் விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’.
இப்படம் வரும் ஒக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவி சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் “இப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 22-ம் தேதி திரைக்கு வரும்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வாஸ்நெகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அதன் பின்னர் சில நாட்கள் கழித்து நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிரடி நாயகன் ஜாக்கி சான் கலந்துகொள்ளவுள்ளார்” என ஆஸ்கார் ரவி சந்திரன் தெரிவித்தார்.


407 Views
ஸ்பெயினில் நடந்த தக்காளி திருவிழாவில், 1.25 லட்சம் கிலோ தக்காளி கூழாக்கப்பட்டது.
இது ஒவ்வொரு ஆண்டிலும் ஸ்பெய்னில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.

கடந்த 1945ல், தக்காளித் திருவிழா, ஸ்பெயின் நாட்டின், புணால் நகரில் துவங்கியது.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருவிழா, கடந்த புதன்கிழமை நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த, 1.25 லட்சம் கிலோ தக்காளிகளை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விழாவை கொண்டாடினர்.

ஸ்பெயினில் நடக்கும், இந்த விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புணால் நகருக்கு படையெடுத்து வருகை தந்திருந்தனர்.
614 Views
 
ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ் சம்பாதித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு ஏற்ற துள்ளிசைப் பாடல்களையும் பாடி பாடகராகவும் வலம் வந்தவர் இசையமைப்பாளர் விஜய் அண்டனி. 

பின்நாளில், நடிப்பதில் ஆர்வம் கொண்டு 'நான்' திரைப்படத்தில் நடிகராக களமிறங்கினார். எதிர்பார்த்தளவுக்கு படம் கை கொடுக்காவிட்டாலும், மீண்டும் வேதாளமாய் அடுத்த கதையோடு சலீம் என்ற பெயரில் கோதாவில் குதித்தார். 
நடிப்பில் கொண்ட ஆர்வத்தினால் இசையமைக்க வந்த வாய்ப்புக்களையும் தவிர்த்து வந்தார். சலீம் வேகமாக உருவாகினாலும் பல சிக்கல்களை சந்தித்து , இந்தா அந்தா என்று இழுபறியில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. 

இந்நிலையில், இப்பொழுது இன்னுமொரு அதிரடி முடிவினை வெளியிட்டிருக்கிறார். 

இனிமேல் எந்த ஹீரோக்களின் படத்துக்கும் இசையமைக்கப் போவதில்லை.

காரணம் என்னவென்றால், நான் நடிக்கும் படங்களில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். இசையமைப்பை கொஞ்சம் தள்ளி வைக்க உத்தேசித்துள்ளேன் என்கிறார் விஜய் அண்டனி. 
 
இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது ரொம்ப தப்புன்னு 
இன்னும் கொஞ்ச நாள்ல உணருவீங்க சாரு..

(கோடம்பாக்கத்து குருவி)
286 Views

இப்பொழுதுள்ள நம்ம தமிழ் சினிமாவில், ஹீரோக்களோடு போட்டிபோடும் அளவில், அழகுப் பதுமைகளாக வெள்ளித்திரையில் உலாவரும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பள விபரம் இதோ....
சுட சுட உங்களுக்காய் ...(படிச்சிட்டு பயந்துடக்கூடாது)

1.நயன்தாரா- 2 கோடிகள்
2. ஹன்சிகா- 1.5 கோடிகள்
3. தமன்னா - 1.5 கோடிகள் 
4. அனுஷ்கா - 1.20 கோடிகள் 
5. ஷ்ருதி ஹாசன் - 1.5 கோடிகள் 
6. சமந்தா - 1 கோடி (இன்னும் அதிகரிக்கலாம்) 
7.த்ரிஷா- 70 லட்சங்கள் 
8. லட்சுமி மேனன்- 55 லட்சங்கள் 
9. ப்ரியா ஆனந்த் - 35 லட்சங்கள் 
10. ஸ்ரீ திவ்யா- 30 லட்சங்கள்

அழகு நடிகைகளின் கண்கவர் படங்கள் இங்கே....

Gossip.sooriyanfm.lk/gallery

15,164 Views
அன்னக்கொடி மூலம் கையை சுட்டுக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா, இப்பொழுது மீண்டும் ஒரு கதையோடு களம் இறங்கியுள்ளார். 
ஆனால் இயக்குனர் இமயம் என்று பெயர் எடுத்த இவர் இம்முறை படத்தை இயக்கப்போவதில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

புதிய இயக்குனர் ஒருவர் படத்தினை இயக்க, பாரதிராஜா எழுதிய கதை திரைக்காவியமாக உருவாகி வருகிறது.
படத்தினைப் பற்றி பாரதிராஜாவே கூறுகையில்...
"பாண்டியநாடு படத்துக்குப் பிறகு மீண்டும், நிறைய வாய்ப்புக்கள் என்னை திரையில் நடிகனாக்குவதர்க்கு வந்தன. ஆனாலும், நான் சம்மதிக்கவில்லை. இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், இங்கிருந்து லண்டனில் குடியேறுகின்ற ஒரு வயதானவருக்கும் , துடிப்போடு பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலே நடைபெறுகின்ற உணர்வுபூர்வமான கதையாக கதை நகருகிறது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்படும் பத்திரிகையாளன் என்பதால், கதையில் நானே பிடித்துப் போனதால் நடிக்க சம்மதித்தேன். இரண்டு மாதங்கள் லண்டனில் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். 
இப்பொழுது வருகின்ற திரை மசாலாக்களை விட, இது யதார்த்தம் பேசும் படமாக திரைக்கு வரும்" என்றார். 

வரட்டும்..
பார்ப்போம்; ரசிப்போம்.
430 Views
விமல்,பிரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 
 
பிரியா ஆனந்த் மட்டுமில்லாமல், இனியா, விசாகா சிங் ஆகியோரும் ஒன்றல்ல மூன்று லட்டு என்று கலக்கியுள்ள படம் இது.
 
இந்த படத்தின் பாடல் இறுவட்டு  வெளியிட்டு விழா சென்னையில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இதில் விமல், பிரியா ஆனந்த்,இமான் மற்றும் விழாவுக்கு வருகை தந்த நடிகர்கள் என நிறையப்பேர் கலந்து கொண்டிருந்தனர் .... இந்த மேடையில் தான் வந்திருந்த நடிகர்களை மட்டும் இல்லாம, எங்களையும்   பொறாமைப்பட வைக்கிற மாதிரி நாயகி பிரியா ஆனந்த் வில்லங்கமான தன்னோட நீண்டநாள் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். 

                அதாவது, பிரியா ஆனந்த்துக்கு நீண்டநாளாக டி.இமானின் கொழுக் மொழுக் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதை தனது படக்குழுவினரிடம் அடிக்கடி சொல்லியும் வந்திருக்கிறார்.

அவருடைய இந்த ஆசையை படவிழாவில் இயக்குனர் ஞாபகப்படுத்த, பிரியா ஆனந்தும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று விழா மேடையிலேயே டி.இமானின் கன்னத்தை பிடித்து சுச்சும்மா, பிச்சுக்குட்டி, செல்லக்குட்டி என்று கிள்ளி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

   அழகான பொண்ணு கன்னத்தை கிள்ளும்போது யாருக்கு தான் சந்தோசம் இல்லை...
ஆனால் இங்கு தான் இமானுக்கு வில்லங்கமே.  ஏற்கனவே திருமணமானவர் இசையமைப்பாளர் டி.இமான். அதனால் வீட்டிற்கு போனால் என்ன ஆகுமோ எண்டு பயந்தாராம்,இன்று வீட்டுக்கு சென்றால் மனைவியிடம் உதை வாங்குவது உறுதி என விழா மேடையிலேயே தனது பயத்தையும் வெளிக்காட்டிக் கொண்டார் இசையமைப்பாளர்  டி.இமான். 

                   என்ன செய்ய......? ஆனானப்பட்ட அரசனே ஆனாலும் மனைவி எண்டு வரும்போது அடங்கித்தானே போகவேண்டியிருக்கு, அதுவே உலக நியதியும் கூட......
 
 
6,740 Views
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் தோன்றுவதும்,ஒரு பாடலுக்கு நடிகைகள் பல லகரங்களை வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போடுவதும் வழமையாக நடந்து கொண்டிருக்கும் சங்கதி.
 
நடிகர்,நடிகைகள் ஆடுவது ஓகே. 
இங்கே  இப்போது, தான் இசையமைக்கும் ஒரு படத்தில் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் நடனமாடியிருக்கிறார்,அதுதான் விசயமே....
அண்மைக்காலமாக தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் ஆகியோர் வரிசையில் யாரப்பா அது புதுசா என்று யோசிக்கிறீர்களா?

        புதுமுகம் ஜெய்நாத், நாயகி அக்ஷயா மற்றும் ஆடுகளம் நரேன், நம்ம இமான் அண்ணாச்சி ஆகியோர் 'நண்பர்கள் நற்பணி மன்றம்' என்ற ஒரு படத்தில் நடிக்கிறார்கள். 
 
இந்த  படத்திற்குத் தான் இசையமைக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. இசையமைக்கிறதோட நிக்காமல், இந்த படத்தில் கிராமப்புறத்தில் இடம்பெறும் படப்பிடிப்பில் வரும்  பாடலுக்கே   ஹீரோ மற்றும் ஹீரோயின் கூட தானும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறாராம் ஸ்ரீகாந்த் தேவா.    
ஆடுவது ஓகே தான்... அனால் அந்த உடம்பை தூக்கி எப்பிடி ஆடியிருப்பார்...? 
இப்ப உங்க கற்பனை குதிரையை தட்டி மனத்திரையில பாருங்க... படம் வந்ததும் எல்லாருமா சேர்ந்து திரையில பார்ப்போம்...
 
3,290 Views
உலகிலுள்ள இளைய சமுதாயத்தின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் 'என்ரிக் இக்லேஷியஸ்'.
லத்தீன் அமெரிக்க பொப் பாடகரான இவர் அருமையான நடனக் கலைஞரும் கூட.

 தன் பாடும் திறமையால் மட்டுமல்லாது, தோற்றத்தினாலும் அனைவரையும் கவர்ந்தவர் என்பது அதிகமானோர் அறிந்த விடயம். 
இவரின் தாயார் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா??
 
'என்ரிக் இக்லேஷியஸ்' இன் தாயார் இசபெல் ப்ரைஸ்ளர்.
வயது 63.
ஆனால் என்ரிக் போலவே இப்போதும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுகிறார். 63 வயதுடையவர் என யாராலும் கூறமுடியாத அளவுக்கு அவருடைய தோற்றம் இளமையாக காணப்படுகிறது. 

இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்தே மொடலிங்கில் ஈடுபடுபவர் என்பது குறிப்பிடதக்க ஒரு விடயம். 1970ம் ஆண்டு திருமண பந்தத்தில்இணைந்துகொண்ட 'இசபெல் ப்ரைஸ்ளர்' எனும் இவருக்கு என்ரிக் இக்லேஷியஸ் உடன் சேர்த்து மூன்று பிள்ளைகள். 
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றும் இசபெல்லின் புகைப்படங்கள் வெளியானது முதல்,மகனைப் போலவே தாயும் இப்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவராக மாறியுள்ளார். 
 
இனிமேலாவது தோற்றத்தை பார்த்து வயதை எடைபோடாமலிருக்க முயற்சி செய்வோம்.  
 
3,840 Views
காதலன் மீது வெறுப்பு கொண்ட காதலி, காதலனை தறதறவென பலபேர் பார்க்க தொடரூந்து நிலையத்தில் இழுத்துச் சென்ற சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. 
 
காதலிக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான் இருந்தாலும் தொடர்ந்தும் காதலியை கவனிக்காது, ஐ போனை கவனித்த நபருக்கு ஏற்பட்ட நிலைதான் இது. 
 
தன்னிடம் அக்கறை கொள்ளாமல் போனுடன் பொழுதை கழித்த நபரின் காதலி அவர் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, நடு பாதையில் காதலனை காலால் உதைந்து, கையிலிருந்த தொலைபேசியை பறிக்க முயற்சிசெய்துள்ளார். பாதசாரிகள், மக்கள் முன்னிலையில் இது நடைபெற்றுள்ளது. 
இப்படி நடந்தும் அவர் தொடர்ந்தும் கையடக்க தொலைபேசியை பார்த்த வண்ணமே இருந்துள்ளார். இது காதலியை இன்னும் வெறுப்பேற்றியுள்ளது. (வீடியோ உங்களுக்காக)
487 Views
இப்போதைய நிலையில் சமூக வலைத்தளங்கள் மக்கள் மனங்களை ஆட்கொண்டிருக்கிறது.
இதன் பின்னால் அதிகமானவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் இதனை யாராலும் மறந்து அன்றாட வேலைகளை செய்யமுடியாதுள்ளது.

இப்படியிருக்கின்ற போது இதற்கு அண்மைய நாட்களில் இளைஞர்கள் பலர் அடிமையாக மாறிவிட்டமையும் உண்மையானதே . நீங்கள் பயன்படுத்தும் இவ்வாறான தளங்கள்,APPS பற்றிய ஆய்வுகள் அடிக்கடி வெளிவருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த இணையத்தை ஆய்வு செய்கின்ற ComScore என்ற நிறுவனம் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு மாதத்தில் எந்த APPS அதிக பயனர்களால் பயன்பாட்டில் உள்ளது என்பதே அதுவாகும்.

அதன்படி அந்த பட்டியலில் Facebook முதலிடத்தை பிடித்துள்ளது.
குறித்த ஒரு மாதத்தில் 115 மில்லியன் பயனர்களால் இந்த APPS பயன்படுத்தப்படுகிறது என்று அந்த கணிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Youtube -83.4 மில்லியன் பயனர்களாலும் ,Google Play App -72 மில்லியன் பயனர்களாலும் பயன்பாட்டில் உள்ளது.
இந்த பட்டியலில் 4 ம் இடத்தை பிடித்துள்ள Google Search -70 மில்லியன் பயனர்களாலும் Google Maps 64.5 -மில்லியன் பயனர்களாலும் பயன்படுத்தபடுகிறது. Gmail -60 மில்லியன் பயனர்களாலும் ,புகைப்படப் பிரியர்களின் விருப்பிற்குரிய தளமான Instragram 46.6 மில்லியன் பயனர்களாலும் பயன்படுத்தப்பட்டு அடுத்த இடத்தை பிடித்துள்ளதன.
Apple maps,Yahoo Finance ஆகிய APPS அடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

இதேவேளை இன்னுமொரு கருத்துக் கணிப்பில் வேலை செய்வதற்கு மிக சிறந்த இடங்கள் என்கின்ற ஆய்வின் அடிப்படையில் Twiitter தளம் முதலிடத்தை பிடித்துள்ளது. கூகிள் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் Facebook நிறுவனம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இலவச உணவு,யோகா மற்றும் கணக்கற்ற விடுமுறை ஆகியனவே Twitter நிறுவனம் வேலை செய்வதற்கான மிக சிறந்த நிறுவனம் எனும் கணிப்பில் முதலிடம் பிடிப்பதற்கான காரணமாகும்
457 Views
அமெரிக்காவிலிருந்து ஆரம்பித்த ஐஸ் குளியல் சவாலுக்கு - Ice Bucket Challenge உலகம் முழுக்கக் கிடைத்த வரவேற்பு அது ஆரம்பித்த நல்ல விழிப்புணர்வு நோக்கத்தினால்.
அதே போல இந்தியாவிலிருந்து ஆரம்பித்துள்ளது இந்த அரிசி வாளி சவால் - Rice Bucket Challenge.

ஜஸ் பக்கெட் சவால் எவ்வாறு ஒரு நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டதோ அதே போல தான் இந்த 'ரைஸ் பக்கெட் சவாலும்' என கூறுகிறார் மஞ்சு.

ம்ம்...சூப்பரான ஒரு ஐடியா தான், இதை அறிமுகப்படுத்தியவர் ஹைதரபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண், எப்படி ஐஸ் பக்கெட் சவால் உலகம் முழுவதும் பிரபலமானதோ அதே போல இந்த சவாலும் இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு ஒரு கைபிடி அரிசியாவது கொடுக்கும் சவால் தான் இது.

ரைஸ் பக்கெட் சவாலுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள Facebook பக்கத்தில், இந்த சவாலில் பங்குபற்றுபவர்களின் புகைபடங்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு உதவி செய்பவர்கள் ஒரு புகைப்படமெடுத்து அதனை அனுப்பி வைத்தால் அவர்களின் படமும் இப்பக்கத்தில் வருகிறது. 
https://www.facebook.com/ricebucketchallenge


அப்படி அரிசி கொடுக்க முடியாதவர்கள்.. அருகிலுள்ள அரச மருத்துவமனைக்கு 100 ரூபாவிற்கு மருந்து வாங்கி கொடுக்கலாம். 

ஐஸ் பக்கெட் சவாலை விட இது மிகவும் இலகுவானது என கூறுகிறார் மஞ்சு. 
மஞ்சுவின் இந்த முயற்சிக்கு பலர் ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர். நல்ல முயற்சிதானே நாமும் பாராட்டுவோம்.

அத்துடன் இப்படியான முயற்சிகளை நாமும் எங்கள் நாட்டிலும் எங்கள் பிரதேசங்களிலும் ஏன் முன்னெடுக்கக்கூடாது?
வறியவர்களுக்கு அரிசி வழங்கலாம் ;
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் கூட வழங்கலாம்.

முன்னெடுப்போமா? 
சவாலுக்குத் தயாரா?
3,867 Views
தெலுங்கில் கவர்ச்சி மழை பொழிந்தாலும் தமிழில் அழகான நடிகை,குடும்ப பாங்கான தோற்றம் ஒழுக்கமான நடிப்பு என்று கொஞ்ச காலமாக பேசப்பட்ட நடிகை சமந்தா அவை அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்தார் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்துடன்.
யாவரும் அசந்து போகும் அளவுக்கு நீச்சல்/குளியல் உடையில் வந்து எல்லோரையும் சூடேற்றியிருந்தார். இனி எப்போதும் சமந்தாவை இந்த மாதிரி பார்க்கலாமா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நேரம் சமந்தாவின் அறிவிப்பு சிரேஸ்ட நடிகர்களை கிளு கிளுப்பூட்டியுள்ளது. 
 
அது என்னதான் செய்தி என்று யோசிக்கின்றீர்களா ?

இனி சமந்தா பெரிய நடிகர்களுடன், அதாவது அஜித்,விஜய், சூர்யா போன்ற தல தளபதிகளுடன் ஆடைகளைக் குறைத்து அப்படி இப்படியெல்லாம் நடிக்க தயார் என்றுத் அதிரடியாக அறிவித்துள்ளாராம்.

அப்போ இனி சமந்தாவையும் நயன்தாரா, அனுஷ்கா, நமிதா, தமன்னாவை தொடர்ந்து பெரிய புள்ளிகளுடன் அந்த மாதிரியான காட்சிகளில் அடிக்கடி காணலாம்.

ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தானே?
24,155 Views
தமிழ் சினிமாவில் 18 வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென, நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் முத்துலக்ஷ்மி என்ற பெண், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பெண்களை தவறாக சித்தரிக்கும் இந்த விடயத்திற்கு உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில் இளம் பெண்கள், 18 வயது கூட நிரம்பாத பெண்கள் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக்காட்சிகளிலும் நடிக்க வைக்கப்படுகின்றனர். குறிப்பாக லக்ஷ்மி மேனன், துளசி, கார்த்திகா, போன்றோர் பராயம் வராத இளம்பெண்கள், இவர்கள் இவ்வாறு நடிக்க வைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு முதல் இவ்வாறான ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை, இது தான் முதல் தடவையாகையால், திரையுலகினரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இவர் பெயர் குறிப்பிட்ட நடிகைகளில் பிரபல நடிகை ராதாவின் இரு மகள்களும் அடங்குகின்றனர். 
மேலும் முத்துலக்ஷ்மி பொது நலம் கருதியே இதனை செய்தார் என தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. 
 
நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது நடப்பதே நடக்குமா எனப் பார்ப்போம்..
377 Views

காதல் என்றால் இவருக்கு கை வந்த கலை. காதலிலேயே வாழ்ந்து , நடித்து காதல் & கழற்றி விடல் துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறும் அளவுக்கு பல நடிகைகளுடன் அப்போதும் இப்போதும் பேசப் படுபவர் நம்ம சிம்பு.

இறுதியாக இவரின் வாலில் தொங்கிகொண்டிருந்த ஹன்சிகா வாலை விட்டு விழுந்தும் சிம்புவை விட்டு விடுவதாக இல்லையாம். அமோகமாக வளர்ந்த காதல் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் உடைந்து போனது தெரிந்த விடயமே.

இது இவ்வாறிருக்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான படப்பிடிப்பு முடியாத நிலையில் இருந்த வேட்டை மன்னன் திரைப்பட படப்பிடிப்புக்களும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

வேட்டை மன்னன் என்ற படத்துக்காக சிம்புவுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்தது தெரிந்ததே.

இது இவ்வாறு இருக்க அண்மையில் ஹன்சிகா வெளியிட்ட கருத்துக்களில் தன்னுடைய குடும்பம் ஒழுக்கம் நிறைந்த குடும்பம். சிம்பு என்னை புரிந்து கொள்ள வில்லை. ஆனாலும் அவர் (சிம்பு )நல்ல இருக்க வேணும். நானும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் ஹன்சிஹா.

வாலு திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருவரது காதல் உடைந்தாலும் திரைப்படத்தின் முழுமையான காட்சிகளையும் ஹன்சிகா நடித்து கொடுத்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது

3,958 Views
[1]      «      1580   |   1581   |   1582      »      [1591]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top