Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஆட்கொல்லி நோயான "இபோலா " இப்போது இலங்கையிலும்....?????

ஆபிரிக்காவின் கொங்கோ நாட்டின் இபோலா ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கபட்ட இந்த வைரஸ் மிகப்பெரும் பயங்கர ஆட்கொல்லி நோயாக நோக்கபடுகின்றது.


மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தையே பெரும் நெருக்கடிக்குள் இந்த நோய் தாக்கமும் அதன் விளைவுகளும் சிக்க வைத்துள்ளன.

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது.

லைபீரியாவில் இந்த நோய் தாக்கம் காரணாமாக இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர்.
லைபீரியா அரசின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்காவினால் அனுப்பபட்ட "இசற்மாப்" என்ற மருந்து இந்த நோயாளிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை லைபீரியாவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய சாலையினுள் புகுந்த 17 பேர் இபோலா நோயாளிகளின் ரத்த கறை படிந்த படுக்கை விரிப்புக்களை திருடி சென்றுள்ளனர்.

 அவர்களை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் ஏதாவது சதிச் செயலா என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.இந்த நிலையிலேயே ஆசிய நாடுகளான இந்தியாவை அடுத்து உலகையே இப்போது ஆட்கொண்டிருக்கும்  "இபோலா " வைரஸ் இலங்கையிலும் ஒருவரிடம் இனம்காணப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சு இதுவரை அப்படி யாரும் அகப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேநேரம், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.

வருமுன் காப்போம்; அவதானமாக இருப்போம்.
454 Views
தமிழகத்தில் உள்ள பிரபலமான வாரப் பத்திரிகை ஒன்று (குமுதம்) அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ஒரு பெரிய கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டது, பெரும்பான்மையான வாக்குகள் இளைய தளபதி விஜய்க்கு கிடைத்தன. இப்பத்திரிகை நிறுவனத்திற்கு இளைய தளபதி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
இது பற்றி பெரிய சர்ச்சைகள் எழுந்து குறித்த வாரப் பத்திரிக்கைக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்த, ஏனைய நடிகர்களின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் விஜயைக் கலாய்க்க, விஜய் தானாக " இளைய தளபதி என்ற ரசிகர்கள் வழங்கிய பட்டமே போதும். சூப்பர் ஸ்டார் என்பது வேண்டாம்" என்று அறிவித்தார். எனினும் வழங்கியது வழங்கியது தான் என்று விஜய் ரசிகர்கள் ஆசைப்பட, விஜயின் முக்கிய ரசிகர் மன்றங்களின் ஏற்பாட்டில், விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக தெரிவு செய்யப்பட்டு, பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. 
 
இப்பிரம்மாண்ட நிகழ்வு மதுரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். நாளை நடைபெறவிருந்த இந்நிகழ்வு திடீரென மத்திய அரசின் அனுமதி இல்லாததன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
ஏனெனில் இந்தியாவின் சுதந்திர தினம் அன்றைய தினமாகையாலும், நாட்டை போற்றும் தினம் என்பதனாலும் என தகவல் வெளிவர, மேலும் பல திரையுலக நட்சத்திரங்கள் இதற்கு இணங்காத காரணத்தினாலும் என கூறப்பட்டிருந்தது. 
35 வருட காலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தையுடைய ரஜினிகாந்த் இன்னமும் உச்சத்தில் இருப்பதாலும், இன்னமும் படங்களில் நடிப்பதாலும் அப்பட்டத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் பலர் கூறியுள்ளனர். 
 
எது எவ்வாறிருப்பினும் இந்நிகழ்வு இன்னும் ஒரு திகதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கெனவே 'கத்தி' பட விவகாரம் ஏராளமான சிக்கல்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்க்கு தொடர்ந்து சிக்கல்கள்.
 
மதுரைக்கு (மட்டுமல்ல விஜய்க்கும்) இன்னும் என்னென்ன சோதனை வருமோ?
 
 
17,856 Views
1999ல் வாலி படத்தில் ஒரு சிறிய காட்சியில் அறிமுகமாகிய ஜோதிகா, குறுகிய காலத்தில் பலரின் மனதில் இடம் பிடித்தவர், இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட். பேரழகன் , மொழி, சந்திரமுகி போன்ற திரைப்படங்களுக்காக விருதுகளும் பெற்றிருக்கிறார். 
2006ம் ஆண்டு நடிகர் சூரியாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் இப்போது இரு குழந்தைகளின் தாய், குடும்ப வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் சினிமாவில் தலைகாட்டவில்லை.
 
இறுதியாக ஜோ நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் மணிகண்டா (2007).
அதன் பின்னர் 2008இல் நடிகை ஜோதிகாவாகவே ஹீரோவா சீரோவா என்ற விழிப்புணர்ச்சி குறும்படத்தில் நடித்திருந்தார்.
 
இது இவ்வாறிருக்க ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் படத்தின் மூலம் சினிமாவிற்கு மறுபிரவேசம் செய்ய உள்ளதாக உத்தியோக பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
‘How old are you’ எனும் திரைப்படம் தான் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது, இப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகை மஞ்சு வாரியார் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே கதாபாத்திரத்தில் 7 வருடங்களுக்கு பின் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். 
 
இவ் ஏழு ஆண்டுகளுக்குள் எத்தனையோ இயக்குனர்கள் ஜோ வை நடிக்க வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் பெண்களின் உரிமை தொடர்பில் அமைந்துள்ள இந்த கதை ஜோவிற்கு மிகவும் பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
 
ம்ம்ம்...ஜோதிகாவை மீண்டும் திரையில் காண்பது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஜோ ஜோ ஜோதிகா <3
333 Views
சர்ச்சையை கிளப்பிய ஷாருக்கின் நடனம் 
 
இந்தியாவின் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சியொன்றில், பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர், இவர்களோடு அதன் விளம்பர தூதுவரான பிரபல நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டிருந்தார். அருமையாக நடந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி மேடையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேரிக்கொண்டிருந்தன. 
 
மேடையில் நடனமாட ஷாருக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, சில ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடிய அவர், திடீரென மேடையின் மேலே அரசியல் பிரமுகர்களுக்கு பந்தோபஸ்துக்கு நின்றுகொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை தூக்கி நடனமாடியிருக்கிறார், இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிலர், காவல் துறை சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற மறந்த குற்றத்திற்காக அந்த பெண் போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர், ஆனால் மேலும் சிலர், கலையை கலைக் கண்ணோடு காண வேண்டும், மேடை நிகழ்சியொன்றில் நடைபெற்ற இந்த சம்பவத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். 
 
ஷாருக் தனியாகவே நடனமாடியிருந்தால், இந்த பிரச்சினையே வந்திருக்காது. 
8,787 Views
நேற்று இலங்கை அணி காலி மைதானத்தில் பெற்ற அபாரமான டெஸ்ட் வெற்றி இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் உற்சாகத்தை வழங்கி இருக்கிறது.
 
இங்கிலாந்தில் வைத்துப் பெற்ற தொடர் வெற்றியின் பின்னர் அஞ்செலொ மத்தியூசின் தலைமையில் இலங்கை அணி புது உற்சாகத்தோடு புறப்பட்டுள்ளது என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அடைந்த காலி டெஸ்ட் போட்டியின் தோல்வியும், கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை  போனதும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் சோர்வையும் வழங்கியிருந்தது உண்மை.
 
 நேற்று மழையையும் முந்தி பாகிஸ்தானை வீழ்த்தியது மீண்டும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.இது மட்டுமல்லாமல் இலங்கையின் குமார் சங்கக்கார துடுப்பாட்டத் தரவரிசையில் முதலாமிடம், அணித் தலைவர் 5ஆம் இடம் என்று இலங்கை ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி.
எனினும் இந்தத் தரப்படுத்தல் காலி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முன்னதாகக் கணிக்கப்பட்டது.

 
இதெயெல்லாம் விட அண்மைக்காலமாகவே எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் இந்திய - இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தியா 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்திடம் தொற்றிருப்பதும் இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க, இந்திய ரசிகர்களுக்கு மிகப் பெரும் சோகத்தைப் பரிசளித்துள்ளது.
 
இன்னொரு சந்தோசம் இலங்கை ரசிகர்களுக்குக் காத்துள்ளது.
 
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியாவை அணிகளுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் பின் தள்ளும் வாய்ப்பு..
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லாமல், இலங்கை பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த  டெஸ்ட் போட்டியில் தோற்காமல் இருந்தால் இலங்கை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் பின் தள்ளி டெஸ்ட் தரப்படுத்தல்களில் 4ஆம் இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
(படத்தைப் பார்க்கவும்)
 
முற்கூட்டிய வாழ்த்துக்களை சொல்லிவைப்போம்.
 
 
 
6,855 Views
அறிமுகமாகி பல வருடங்கள் கடந்திருந்தாலும், லட்சுமி ராயால் இன்னும் தமிழில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த முன்னணி இடத்துக்காக போராடுகிற லட்சுமிராய் எனும் இப்போதைய லட்சுமி ராய்க்கு, அஜித்தோடு மங்காத்தா லோரன்ஸோடு காஞ்சனா போன்ற படங்கள் அதிகப்படியான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தன. 
கொஞ்சமாய் முன்னேறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது தமிழில் அரண்மனை, இரும்புக் குதிரை போன்ற படங்களிலும், தெலுங்கு மலையாளம் கன்னடப் படங்கள் சிலவற்றிலும் நடித்து வரும் நம்ம லட்சுமிக்கு, விபரீதமான ஆசையொன்று அரும்பியிருக்கிறது. 

   அவதார் படத்தினை எடுத்து உலகத்து புது சினிமா வழி காட்டிய இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் தனக்கு நடிக்க ஆசையாக உள்ளது என்றும், அவரது படத்திலென்றால் ஆடைகளை தியாகம் செய்தும் (ஒஹ்.....) நடிக்க தயார் என்று பகிரங்கமாக கூவியிருக்கிறார். 

கமரூன் இயக்கத்தில் எப்போது நடிக்க வாய்ப்பு வருமென காத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் லட்சுமி ராய்
அடடா !! 
என்னம்மா? என்னாச்சு புள்ளைக்கு?

311 Views
தங்கள் பணத்தின் செழிப்பை பல்வேறு விதமாக பகட்டாகக் காட்டிக் கொள்ளும் பலரை உலகில் பார்த்து வருகிறோம்.
கடந்த வருடம் இந்தியரான டட்டா புகே (Datta Phuge) 3 கிலோ எடைகொண்ட $250,000​ பெறுமதியான தங்க உடை அணிந்து உலகை வாய் பிளக்க வைத்திருந்தார். (உனக்கெல்லாம் இந்த பில்ட் அப் தேவையா என்ற கவுண்டர் வொயிஸ் தூரத்தில் கேட்கிறது)

இப்போது இன்னொரு இந்தியர் உலகத்தை தன் பக்கம் பார்க்கச் செய்திருக்கிறார்.
அதாவது தனது சட்டைப் பக்கம்...
பங்கஜ் பரா (Pankaj Parakh​) என்ற மும்பாய் பணக்காரத் தொழிலதிபர் இன்று தனது 45வது பிறந்தநாளுக்காக 4 கிலோ எடையில் ​​தங்கத்தால் செய்த சட்டதி அணிந்து கலக்கி இருக்கிறார்.

ஆடை தொழிற்துறையில் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் பங்கஜ் ஆரம்பக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக் கொண்டவர்.
தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில், சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேர்த்தி ஒன்றை நிறைவேற்றவே இப்படி தங்கத்தினால் ஆடை அணிந்து வலம்வந்து கலக்கி இருக்கிறார்.

கோடி பணம் கொட்டி இருந்தால் என்ன தான் செய்ய முடியாது?​

இதோ தங்கச் சட்டைக் காணொளி 

696 Views
இன்று மன்செஸ்டர் - Old Trafford மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட முன்னர், மன்செஸ்டரில் உள்ள Manchester Unitedஇன் மைதானத்துக்கு இந்திய அணி விஜயம் செய்துள்ளது.
 
இது பற்றிய செய்தியையும் புகைப்படத்தையும் Manchester United உத்தியோகபூர்வ Facebook பக்கம் பதிந்துள்ளது.

 
கடந்த மாதம் இலங்கை அணியின் வீரர்களும் மன்செஸ்டர் யுனைட்டட்டின் ரசிகரான மஹேல ஜெயவர்த்தனவும் இங்கே விஜயம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மஹெலவின் டெஸ்ட் ஒய்வு செய்தியையும் தங்கள் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் செய்தியாக வெளியிட்டு கௌரவித்தது.

3,064 Views

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயணிகள் சேர்ந்து ரயில் ஒன்றை அசைத்து சிக்கிக்கொண்ட பயணி ஒருவரைக் காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் இருந்து இறங்கும் பயணி ஒருவரின் கால் ரயில் மற்றும் ரயில்மேடைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்டது.15 சென்டி மீட்டர் அளவுள்ள சிறு இடைவெளியிலே சிக்கியதால், அவரால் காலை வெளியில் எடுக்க முடியாமல்போக, அங்கிருந்த பயணிகள் உடனடியாக, ஒற்றுமையாக செயற்பட்டு ரயிலை அசைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.10,000 தொன் நிறையுடைய ரயிலை இத்தனை பேர் சேர்ந்து அசைத்தமை தனக்கு ஆச்சரியமளிப்பதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமையே பலம் என்று சும்மாவா சொன்னார்கள்?>

 
6,184 Views
நாம் வாழும் சமூகத்தில் நடக்கபோகும் விடயங்களை எண்ணி அழுபவர்கள் அதிகம் இருக்கின்றனர், ஒரு வேளை அது நடக்காவிடில் அழுதது கூட வீணாகி விடும். சாகும் நாளை எண்ணிக்கொண்டிருந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இவற்றில் இது ஒரு வகை.

            பிரித்தானியாவில் 5 வயதான ஒரு சிறுமி தன்னுடைய குட்டி தம்பி வளரக்கூடாது, வளர்ந்தால் தனை விட்டுப் பிரிந்துவிடுவான்; தன்னை விட்டு அவன் பிரிந்து விடக்கூடாது என்று அழுகிறாள். அவன் ரொம்ப அழகாக இருக்கிறான் அவன் என்னை விட்டு பிரிந்து விடக்கூடாது என மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறாள் இந்த சிறுமி.சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பிரபல உளவியளார் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, 3-5 வயதான குழந்தைகளுக்கு இவ்வாறான எண்ணம் வருவது இயற்கையானது தான். பயப்பட தேவையில்லை, அவ்வாறான எண்ணங்களோடு வாழும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிகமான கவனம் எடுக்க வேண்டும், அதிக அன்பு காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் சில குழந்தைகளுக்கு IQ அதிகமாக இருப்பதால் மரணத்தை பற்றி அவர்கள்; அதிகம் தெரிந்திருப்பது தான் இதற்குக் காரணம், இதனாலேயே அவர்கள் தன் தம்பியோ, தங்கையோ வளர கூடாது எனவும், அவர்களை விட்டு பிரிந்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். 
 
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த சிறுமி தன் தம்பியின் பக்கம் திரும்பி அவனை பார்த்த வண்ணம் அழும் வீடியோ பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் தேடப் படுகின்றன.
இதோ காணொளி.. 


17,086 Views
தனுஷ், அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வேலையில்லாப் பட்டதாரி படத்திற்கு ஏற்கனவே பல எதிர்ப்புகள் வந்தன. 
 
இப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி பலரின் எதிர்ப்பை பெற்றது, அனைவரும் அறிந்ததே. ஒருவாறு அதை சமாளித்து, படம் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் இச்சந்தர்பத்தில் மீண்டும் ஒரு புது சர்ச்சை. 
இப்படத்தில், வேலையில்லாத தனுஷ் தன் தந்தையிடம் என்னை நீங்கள் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிக்க வைத்ததால் தான் எனக்கு வேலையில்லை, தம்பியை ஜோன் கல்லூரில் படிக்க வைத்ததால் தான் வேலை கிடைத்திருப்பதாக, ஒரு வசனம் அமைந்துள்ளது, 
 
இது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளை அவதூறுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சைகள் எழும்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் நடைபெறுகின்றன. ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், உடனடியாக அவ்வசனத்தை நீக்க வேண்டும் என, தனுஷிற்கு கண்டனக் கடிதங்களும் அனுப்பி வருகின்றனர்.
 
VIP தனுஷ் சுனாமியிலேயே ஸ்விமிங் போடுபவர்; இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறார் பார்ப்போம்...
531 Views
இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னர் கடமையாற்றியவர்.
அதன் பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்ட இழுபறிகள், குளறுபடிகள் காரணமாக அவுஸ்திரேலியாவின் Big Bash Leage அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக சிறப்பாக செயற்பட்ட இவரது திறமையைக் கண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இவரைத் தனது பயிற்றுவிப்பாளாராக வளைத்துப்போட்டது.
 
ஹதுரு பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளர் ஆன பின்னர், இலங்கையின் முக்கிய காய்கள் மீது அவரது சிபாரிசில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனம் திரும்பும் என சூரியன் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்திருந்தோம்.
 
இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது.
 
உள்ளூர் அனுபவத்தை வைத்து நீண்டகாலமாக அடிப்படையிலிருந்து கட்டியெழுப்பபட்டு வந்த இலங்கையின் பயிற்றுவிப்புக் குழாமின் இரு முக்கிய தூண்கள் வங்கப் பக்கம் நகர்வதாகத் தெரியவந்துள்ளது.இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ருவான் கல்பகேயும், சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்கவும் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தனர்.
 
இவர்கள் இருவருமே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
 
உறுதியான ஒப்பந்தம், நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை விட நம்பிக்கையான ஊதியம் + வசதிகள் வழங்கப்படுவதால் இவர்களது வெளியேறல் உறுதி போலவே தெரிகிறது.
 
நிரந்தர பயிற்றுவிப்பாளர் ஒருவரை பாகிஸ்தானிய தொடரின் பின் இலங்கை தேடவிருப்பதைப் போல, இந்தப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களைத் தேடவேண்டி இருக்கும்.
 
இன்று இவர்கள் இருவரையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
இது ஏதாவது நல்ல முடிவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து தான் அறிந்துகொள்ள முடியும்.
 
3,314 Views
அண்மைக் காலமாக தான் இசையமைக்கும் திரைப்படங்களில் கூட முன்னர் போல  பின்னணி பாடுவதில்லை இசைஞானி இளையராஜா. எதற்காக இந்த கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாரோ தெரியாது. 
           அப்படிப்பட்ட ஒருவரை சீனு ராமசாமி இயக்கி வளர்ந்து வரும் இடம் பொருள் ஏவல் படத்தில், பாடல் ஒன்றை பாடவைக்க அவரது இளைய மகன் யுவன் சங்கர்ராஜா முயன்று வருகிறார். யுவன் இசையில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் வைரமுத்து எழுதியுள்ள குறித்த பாடலை இசைஞானி பாடுவாரா என்று எதிர்பார்த்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஏமாற்றம் கொடுத்திருந்தார் இசைஞானி.
 
வைரமுத்துவின் பாடலை தான் பாடவில்லை என்பதை தன் ரசிகர் மன்ற மூலமாக அறிவித்திருந்தார் இளையராஜா.

    இந்நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில், யுவனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நம்ம கொலைவெறி புகழ் தனுஷ் தான். 

   தனது பாடலை இசைஞானி பாடியிருப்பது பற்றி அதீத புளகாங்கிதத்தை வெளிபடுத்தும் தனுஷ், தனது சமூக வலைத்தளம் ஒன்றில் , நான் எத்தனை பாடல்களை எழுதியிருந்தாலும், எனது இந்தப் பாடலை இளையராஜா பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 
அடிக்கிறதெல்லாம் சிக்சர், பிடிக்கிறதெல்லாம் பெரிய இடமாக பிடிக்கிறார் தனுஷ்.

ஹ்ம்ம் ... வாழ்த்துக்கள் தனுஷ் !
277 Views
மாபெரும் ரசிகர் சமுத்திரத்துடன் நடந்த மிக வெற்றிகரமான சூரியன் மெகா பிளாஸ்ட்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கம் முழுவதும் நிறைந்து வழிந்த அளவு சூரியன் ரசிகர்களோடு சனிக்கிழமை (26ஆம் திகதி) இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல நட்சத்திரங்கள் M.K.பாலாஜி, ஷர்மிளா, பிரபு ஆகியோரோடு இலங்கையின் பிரபல இசைக்குழுவான K.கருணாவின் 'சரிகம'வின் இசையில் இலங்கையின் பிரபல உள்ளூர்க் கலைஞர்களும் கலந்து சிறப்பித்த மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இது.

சென்சேஷன் நடனக் குழுவின் கண்கவர் நடனங்கள், வாண வேடிக்கை, ஒளிவிளக்கு அலங்காரங்கள், பிரம்மாண்டமான மேடை அமைப்பு என்று இலங்கையில் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான பெரும் இசை விழாவாக சூரியன் மெகா பிளாஸ்ட் இடம்பெற்றது.

யாழ்ப்பாண சூரிய நேயர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் வந்திருந்த சூரிய ரசிகர்களால் யாழ்ப்பாணம் நகர் முழுவதும் நிறைந்து ஒரு கொண்டாட்டமான தோற்றத்தை வழங்கியிருந்தது.

எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அதிகாலை 1.45 வரை நடந்த சூரியன் மெகா பிளாஸ்ட் யாழ்ப்பாணத்தில் இதுவரை நடந்த இசை நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய ரசிகர்கள் திரண்ட நிகழ்ச்சி என்று சகலராலும் பெருமையாகப் பேசப்படுகிறது.


Click here for Photo Album 1

Click here for Photo Album 2


9,542 Views
சூரியனின்  16வது பிறந்ததின கோலாகல கொண்டாட்டங்கள் இன்று காலை சூரியனின் அலுவலகத்தில் ஆரம்பித்தது. சமய வழிபாடுகளோடு   தொடங்கிய நிகழ்வில், ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு.ரெய்னோர் சில்வா தலைமை தாங்கி நிகழ்வுகளை அலங்கரித்தார்.

அவரோடு அரவிந்த லொக்குகே, தம்மிக பண்டார தென்னக்கோன், சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் ஏனைய உயரதிகாரிகளும் மாத்திரமில்லாமல், சூரியனின் பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு மெகா ப்ளாஷ்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான எம்.கே.பாலாஜி, சர்மிளா, பிரபு ஆகியோரும் சூரியக் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பித்தார்கள்.

மதியப் பொழுதில் சூரியனோடு இணைந்திருக்கும் நேய சொந்தங்களுக்காக, உள்ளக கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சரிகம கருணாவின் இசைநிகழ்ச்சி  காற்றலையில் நேரலையாக கலந்து இன்னும் பிரமிப்பை அதிகமாக்கியது.

அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், அன்போடு நிறைந்த நேயர் கூட்டம், மகிழ்ச்சித் திளைப்பின் உச்சியில் முதல்தர வானொலி சூரியன் தனது 16வது அகவை நிறைவை இன்று அலுவலகத்தில் கொண்டாடியது ஒரு சிறப்பெனில், இன்னொரு அசத்தலான சிறப்பு நாளையும் நிகழவுள்ளது.

நம் பாரம்பரியம் பேசும் யாழ் மண்ணில்
மெகா ப்ளாஸ்ட் எனும் நாமத்தோடு - அதிரடி இசை பிரவாகம்

Sooriyan FM 16th Anniversary Celebration - Office Party

417 Views
[1]      «      1583   |   1584   |   1585      »      [1593]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top