உயரத்தில் இருக்கிற உங்கள் சூரியனின் உயரத்தைத் தொட எல்லாருக்குமே அதீத ஆசை..
ஆனால் ஆசை இருக்கிற எல்லோருக்கும் அடைய முடிவதில்லையே.
அடைந்தவரும் நிரந்தரமாக அனுபவிப்பதில்லை. ஆனாலும் உயரங்களைக் கீழே இருந்து பார்க்கும் பலருக்கு அடைவது மட்டுமன்றி, அந்த உயரத்தையே தங்கள் சாதனை சாகசத்துக்கு மாற்றுவதில் ஒரு சந்தோசம்..
இதுவும் ஒரு சாதனை சாகசம் தான். 2013.04.03 அன்று முப்பத்து ஏழு மாடிகளைக் கொண்ட இலங்கையின் முதலாவது உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தில் தான் இந்த அரிய சாகசம் நடந்தேறி இருக்கிறது!!!
கொழும்பு வாழ் மக்களுக்கு புதியதோர் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கி இருக்கிறார்கள் அமெரிக்க பிரஜை. கிறிஸ்டன் ஈவன் மற்றும் கனடா பிரஜையான கரட் பெரீ.
பேஸ் ஜம்ப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளைக் கண்ட இவர்கள் இருவரும் முதன் முதலாக இலங்கை மண்ணில் பேஸ் ஜம்ப் போட்டிகளுக்கான ஒரு முன்னோட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
அதற்காக இருவரும் உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது மாடிக்கே சென்று அங்கிருந்து தரையை நோக்கி குபீர் என்று விழுந்திருக்கிறார்கள்.
சூரியன் எப் . எம் இன் 35 ஆவது மாடியை கடக்கின்ற பொழுது அவர்களுடைய பரசூட் விரிந்து கொண்டது.
நல்லவர்கள் குடிகொண்ட இடமல்லவா? அதுதான்.!!!!
நல்லவேளை உலக வர்த்தக மையத்தினை 37 மாடிகளோடு நிறுத்தி விட்டார்கள்.....
கீழே இருந்து விபரம் அறியாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் வாய் பிளந்து நின்றார்கள்.
அடுத்தமுறை சொல்லிட்டு செய்யுங்கப்பா.
பார்க்காத பலரும் பார்ப்பாங்கல்ல..