இது இரண்டாம் பாக சீசன் போல...
பில்லா -2, அமைதிப்படை-2, சிங்கம்-2 (பாகம் 3உம் வருமோ?) ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அப்படம் சம்பந்தமாக, கதை தயார் செய்துவிட்ட அவர், ரஜினியை ஏற்கனவே சந்தித்ததாகவும், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது கமல்,அஜித், சத்யராஜ், சூர்யா,அர்ஜூன் போன்ற நடிகர்களெல்லாம் ஏற்கனவே ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதால் ரஜினியும் நடிப்பார் என்ற நம்பிக்கையில், கோச்சடையானை அடுத்து ரஜினியை சந்தித்து பாட்ஷா-2 கதையை சொல்ல முடிவெடுத்திருந்தாராம் சுரேஷ்கிருஷ்ணா.
ஆனால், இந்த செய்தி ரஜினியின் காதுகளை எட்டியபோது, பாட்ஷா-2வில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டாராம். 18 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தில் அதே வேகத்துடன் இப்போது நடிக்க முடியாது. அதோடு, இப்போதைய தன் உடல் நிலையம் மாறி விட்டது. அதனால் இனி அந்த படத்தின் தொடர்ச்சியில் நடிப்பது சாத்தியப்படாது என்று கூறி விட்டாராம். அதனால், பாட்ஷா-2 முயற்சியை விட்டு விட்டாராம் சுரேஷ்கிருஷ்ணா.
1,877 Views
நய்யாண்டி தொப்புள் விவகாரத்துக்குப்பிறகு நஸ்ரியாவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டாலும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார். காரணம் மலையாளப் பக்கம் அவருக்கு இருக்கும் வரவேற்பு.
இதனால் தங்களது படங்களை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் டைரக்டர்கள் சிலர் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதனால் நய்யாண்டிக்கு பிறகு தனது மார்க்கெட் சரிந்து விட்டதாக சொல்லப்படும் கருத்து தவறு என்று கூறும் நஸ்ரியா, தான் எப்போதும் போலவே இப்போதும் பிசியாகத்தான் இருப்பதாகவும். தன்னை எந்த இயக்குனர்களும் நிராகரிக்கவில்லை என்றும் கூறி வருகிறார். அதோடு, ஏற்கனவே தனுஷ், ஆர்யா, ஜெய் போன்ற நடிகர்களுடன் நடித்து விட்டவர் கூடிய சீக்கிரமே விஜய், அஜீத், சூர்யா என்று ஜோடி சேரக்கூடிய நேரமும் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்.
குறிப்பாக, தனது அபிமான ஹீரோவான அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதனால் கைவசம் இருக்கும் படங்களுக்குப்பிறகு அவருடன் நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் நஸ்ரியா, யாரையும் தேடிச்சென்று மட்டும் சான்ஸ் கேட்க மாட்டாராம். அப்படி தானாக இறங்கி சென்றால் அவர்கள் கிளாமராக நடிக்க சொல்வார்கள். ஆனால் அவர்களே என்னைத்தேடி வந்தால் நான் சொல்ற மாதிரி கேட்பார்கள், என் பேச்சுக்கும் மரியாதை இருக்கும் என்கிறார் நஸ்ரியா.
நல்லா பேசுது மலையாள சேச்சி.
அடுத்த படம் 'திருமணம் எனும் நிக்கா' வெளிவந்த பிறகு தான் தெரியும் கதை.
1,536 Views
முன்னதாக தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.
குறிப்பாக, ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் நடித்துள்ள ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் வசனமும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.
அப்படி பேசி நடித்துள்ள வசனமும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார். அதனால், ஜில்லாவுக்கு எந்த ரூபத்திலும் தடைகள் ஏற்படாது என்பதுதான் அனைவரது எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.
பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் bannerகள் தமிழகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் ராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது ரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் தடை விதித்து விட்டார்களாம்.
அதனால் bannerகளை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் ரசிகர்கள். இதன்காரணமாக, ஒருவேளை இதுவும் தமிழக அரச 'அம்மா'வின் உத்தரவாக இருக்குமோ என்று விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
படத்தை தயாரித்தவர்களோ, படம் திரைக்கு வரும் நேரத்தில் இன்னும் என்னென்ன ரூபத்தில் பிரச்னைகள் வரப்போகிறதோ என்று கலவரமடைந்திருக்கிறார்களாம்.
1,529 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் அலுக்காமல் சளைக்காமல் கதை கேட்பாராம். அதையடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டு, மற்ற இயக்குனர்களிடம் இன்னொரு முறை நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று நோகாமல் நாசூக்காக சொல்லி விடுவார்.
அதேபோல்தான், சூப்பர் ஸ்டார் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று பூரண குணமடைந்து விட்டு சென்னை திரும்பியபோதும், சில இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்படி சென்றவர்களில் கே.வி.ஆனந்த் சொன்ன கதையையும் கேட்டார் ரஜினி. ஆனால், இன்று வரை அந்த கதை பற்றி எதுவுமே சொல்லவில்லையாம்.
பல மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருந்த அவர், பின்னர் ரஜினியிடமிருந்து க்ரீன் சிக்னல் விழும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். அதையடுத்து அவரது மருமகன் தனுஷை வைத்து அநேகன் என்ற படத்தை தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார்க்காக உருவாக்கிய கதைக்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று பலரோடும் ஆராய்ந்த கே.வி.ஆனந்த், இப்போது அந்த கதையை அஜீத்தை சந்தித்து கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளி வந்துள்ளது.
வருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார் தல என்று கிளம்புமோ கதை?
8,882 Views
வீரம் பாடல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியதையடுத்து அவசர,அவசரமாக 'ஜில்லா' பாடல்களை வெளியிட்டுள்ளார்கள்.
நேற்று இளையதளபதி விஜய் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
'ஜில்லா' தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார். சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த ஆர்.பி.சௌத்ரி, மூன்று தயாரிப்பாளர்களுக்கும், இரண்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக, 'ஜில்லா' இசையை வெளியிட்டை நடத்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்தார்கள் ஜில்லா குழுவினர்.
விஜய் மேடையேறியதும் ஜில்லா இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான் ஆகிய இருவரும் அரங்கத்துக்குள் வந்தனர்.
விஜய் 'ஜில்லா' இசையை வெளியிட, ஐந்து தயாரிப்பாளர்களும் பெற்றுக்கொண்டனர்.
21ம் திகதி 'ஜில்லா' இசை வெளியிடப்படும் என முன்னர் அறிவித்துவிட்டு, திடீரென இசை வெளியீட்டை நிகழ்த்தியது ஏன் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய மண்டையைக் குடையும் கேள்வி.
பொங்கலுக்கு ஜில்லா வெளியாகாது என்று அரசியல் சம்பந்தப்படுத்தி வதந்தி பரவுவதையடுத்தே இந்த அதிரடி முடிவை விஜயும் தந்தையார் சந்திரசேகரனும் தயாரிப்பாளர் சௌத்ரியும் எடுத்ததாக கூறப்படுகிறது.
1,673 Views
சின்னத் திரையிலிருந்து சிரிப்பு மூலமாக மெரீனாவில் எதிர்நீச்சல் போட்ட வருத்தப்படாத சிரிசிரி நடிகர் இப்போது பம்ளிமாஸ் நடிகையுடன் நடித்து வருகிறார். அடுத்து அவரை யார் படத்துக்காக புக் பண்ணச் சென்றாலும் அந்த நடிகையை புக் பண்ணிட்டு வாங்க, இந்த நடிகைய புக் பண்ணிட்டு வாங்கன்னு சொல்றாராம்.
அவர் குறிப்பிடுற நடிகைங்க ஒன்பதுதாரா, அகர்வால் நடிகை, ஆறடி உயர அழகு நடிகை.
சொன்னா நீங்க யாரும் நம்ப மாட்டீங்க... அண்மையில ஒரு தயாரிப்பாளர் அவரை அணுகியிருக்காரு. அவர் படத்தை ஏதோ ஒரு காரணத்தால் தவிர்க்க நினைத்த ஹீரோ. வடக்கே இருக்குற பிரியமான சோப்ரா நடிகையை புக் பண்ணிட்டு வாங்க பார்க்கலாமுன்னு ஒரே போடா போட்டாராம்.
சிவ சிவா.....
1,812 Views
இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் பேத்தி காம்னா தமிழில் இதய திருடன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு மச்சக்காரன், காசேதான் கடவுளடா, ராஜாதிராஜா படங்களில் நடித்தார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லா நிலையில் இருக்கிறார்.
இப்போது காம்னா பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் காம்னாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதால் தன் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகியவுடன் இதனை காம்னா மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படியானால், இனி இன்னொரு அழகிய நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டதா?
2,033 Views
மொட்டைத் தலை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது தல மொட்டை அடித்த சுவாரஸ்ய பரபரப்பு.
இமேஜைப் பற்றி கவலைப்படாதவர் 'தல' அஜித்!
சமீப காலமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் படங்களில் தோன்றி நடித்தவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு சிறிதும் குறையவில்லை என்பதோடு, பெரும்பாலான ரசிகர்கள் ’தல’யின் புதிய கெட்-அப்பை வரவேற்று ரசித்தார்கள் என்பதே உண்மை!
வெளிவர இருக்கும் வீரத்திலும் தலயின் கெட் அப் அவ்வாறே.
இந்நிலையில் அஜித் இப்போது ஒரு புதிய கெட்-அப்பில், அதாவது மொட்டை தலையுடன் காட்சி தருகிறார்! இந்த மொட்டை தலை கெட்-அப் எந்தப் படத்திற்கானது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்!
அவர், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்து வந்த ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி அஜித்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு தங்களது முடியை காணிக்கையாக்கி வந்திருக்கிறார்கள்! ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் அஜித் என்றாலும், வெளிப்படையாக இப்படி திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து மொட்டை அடித்து வந்திருப்பது இதுதான் முதல் முறை!
இதற்கு முதலேயே 'ரெட்' படத்தில் மொட்டை தோற்றத்தில் அஜித் நடித்திருந்தாலும், முழு மொட்டை அடித்திருப்பது இதுவே முதல் தடவை.
ஆக, ‘தல’ எதை செய்தாலும் அது ஒரு ஸ்டைல்தான், அது ஒரு செய்திதான்!
5,018 Views
வெள்ளாவி வச்சு வெளுத்த தேவதைக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் காதல் மன்னன் ஆர்யா.
ஆரம்பம் படத்தில் முதல் முறையாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் டாப்சி.
சும்மாவே தேடி ரன் எடுக்கும் ஆர்யா, தன்னுடன் கிசு கிசுக்கப்படும் நயனுடன் சேர்த்தே, டாப்சியுடனும் நட்புக்கான பாலத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டார்.
அந்த நட்பின் அடிப்படையில் சிபாரிசுகளை முடுக்கி விட்டு வருகிறாராம் ஆர்யா.
'தடையறத் தாக்க' புகழ் மகிழ் திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் மீகாமன் படத்திற்கு கதாநாயகி தேடப்பட்டு வந்தபோது டாப்சியின் அருமை பெருமைகளை சொன்ன ஆர்யா, சத்தமில்லாமல் அவரை அப்படத்தில் இணைத்து விட்டாராம்.
இதனால் ஆர்யா போன்ற வெள்ளை மனசுக்காரர்களால் எப்படியேனும் டாப் நடிகையாகிவிடலாம் என்ற புதிய நம்பிக்கையில் உள்ளாராம் டாப்சி.
3,893 Views
நம்ம மயிலு ஸ்ரீதேவியின் மகளும் அழகாகவே இருக்கிறார்.
இந்தியாவே என்ன, உலகே அறிந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகியிருந்தாலும் ஹிந்தி சினிமா சென்று நடித்து, ஹிந்திப்பட தயாரிப்பாளரான போனி கபூரை மணந்து கொண்டார்.
அழகிய அம்மாவாக ஸ்ரீதேவி இன்னமுமே அழகுடன் இன்றைய கதாநாயகியர்க்கு அழகுடன் இருக்கிறார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு பெண்கள் உள்ளனர். பதினாறு வயது நிரப்பிய பள்ளி மாணவியான ஜான்வி தன் தாயாருடன் பஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சில நிகழ்ச்சிகளுக்குத் தனியாகவும் சென்று வந்தார். அவ்வாறான நேரங்களில் பல தயாரிப்பாளர்களின் கவனம் அவர் மீது விழுந்துள்ளது.
ஜான்வியை நடிக்க வைக்க பலர் கேட்டுவந்த நிலையில், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா போன்றோரும், அல்லு அர்விந்த், அஸ்வினி தத், தில் ராஜூ போன்ற பெரும் தயாரிப்பாளர்களும் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். மகள் படித்து வருவதால் யோசிக்கிறார்களாம்.
வாங்க சின்னம்மா. வளமான எதிர்காலம் இருக்கு.
5,910 Views
விஜயசாந்தி போல் (சண்டை)ஆக்சன் படங்களில் அதிரடி கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுவதாக நமீதா கூறியிருக்கிறார். இவரிடம் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அரிராஜன் இயக்கும் ´இளமை ஊஞ்சல்´ படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
ஊதி வந்த உடம்பை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர, உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த குண்டு கவர்ச்சிப்புயல் மீண்டும் ஒரு அதிரடி சுற்று வரப்போவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.
5,754 Views
தீபிகா படுகோனுக்கு தமிழில் இப்போதைக்குக் கைவசமுள்ள படம் என்றால் ஒரே படம்தான். அது "கோச்சடையான்'.
ஆனால் ஹிந்தி சினிமாவில் இவர்தான் நம்பர் 1 ஹீரோயின்.
இந்த நிலையில் ஹாலிவுட்டில் நடிக்க அவர் கடும் முயற்சி செய்து வந்தார். இதன் பயனாக "பாஸ்ட் அண்டு பியூரியஸ் 78242' (Fast and Furious) என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்த வாய்ப்பைப் பெற இவருடன் சேர்ந்து கங்னா ரணாவத் மற்றும் சித்ரங்கடா சிங் ஆகியோருடன் கடும் போட்டியிட வேண்டியிருந்தது. தற்போது அந்தப் படத்தில் தீபிகா நடிக்கவில்லை.
காரணம் கேட்டால், "எனக்கு இரண்டு ஹிந்திப் படங்கள் முடிக்க வேண்டியிருப்பதால் டேட்ஸ் இல்லை, நடிக்கவில்லை' என்று சொல்கிறார். கவர்ச்சி & இளமை மோதும் போட்டியில் தோற்று விட்டாரா இந்த உயரக் கன்னி?
4,886 Views
பாடகராகவும் புகழ் பெற்று வரும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தான் அதிர்ஷ்டசாலி என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் அமலாபால் ஜோடியாக தனுஷ் நடித்து வரும் படம் 'வேலையில்லாத பட்டதாரி'. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.
இப்படத்திலும் தனுஷ் ஒரு மெலடிப் பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் இன்னும் ஓர் சிறப்பம்சம் என்னவென்றால், தனுஷூடன் அந்த மெலடி டூயட்டைப் பாடியது S.ஜானகியம்மா என்பது தான்.
கொலை வெறி பாடல் மூலம் உலகப் புகழ் அடைந்தார்கள் அனிருத்தும், தனுஷும். அப்பாடலிற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனுஷிற்கு விருந்தளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வௌியான நய்யாண்டி படத்திலும், டெடி பியர் என்ற பாடலைப் பாடியிருந்தார் தனுஷ்.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் திரை இசைப் பாடல்களைத் தவிர்த்து வந்த ஜானகியம்மா, இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து மெலடிப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
ஜானகியம்மாவுடன் பாடல் பாடிய அனுபவம் குறித்து தனது ட்வீட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ், ‘எங்களுக்காக மீண்டும் பாட சம்மதித்ததற்கு ஜானகியம்மாவிற்கு வேலையில்லாத பட்டதாரி படக்குழுவினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவன், அதனால் தான் ஜானகியம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது´ எனத் தெரிவித்துள்ளார்.
S.ஜானகி அவர் பாட ஆரம்பித்த 50ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அத்தனை பாடக, பாடகியருடனும் சேர்ந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
4,851 Views
சீயான் விக்ரம் நடித்து சமீபத்தில் வந்த படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் படி அமையாததால் ஷங்கரின் "ஐ' படத்தில் மிகவும் உடல் வருத்தி நடித்து வருகிறார்.
இந்தப் படம் முடிந்ததும் சில மசாலா படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கௌதம் மேனன், தரணி போன்றோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரமை செதுக்கிய பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் படப்பிடிப்பு நீண்ட நாள் நடக்குமே என்று மறுத்துவிட்டதாகக் கேள்வி.
14,908 Views
இசையமைப்பாளர் விஜய் அன்டனி, ‘நான்’ படத்தில் ஹீரோவாக நடித்ததை அடுத்து,மேலும் சில இளவட்ட இசையமைப்பாளர்களையும் ஹீரோவாக்கும் முயற்சியில் சில புதுமுக இயக்குனர்கள் கதைகளுடன் வலம் வந்தனர். ஆனால், அதற்கடுத்தபடியாக யாருமே பிடிகொடுக்காதபோதும் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டும் தனக்குள் இருந்த ஹீரோ ஆசையை வெளிப்படுத்தி கதை கேட்டார்.
பல கதைகள் கேட்டதில் மதயானைக்கூட்டம் என்ற கதை பிடித்து விட அதில் நடிப்பதாக இருந்தார். ஆனால், கதை பிடிக்கவில்லையோ என்னவோ திடீரென்று கதிர் என்ற வேறொரு நடிகரை அந்த கதையில் நடிக்க வைத்து விட்டு தான் நழுவிக்கொண்டார்.
அதன்பிறகும் தொடர்ச்சியாக கதை கேட்டு வந்த ஜி.வி.பிரகாஷ், இப்போது பென்சில் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார். சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் அந்த படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடிக்கிறார் அவர்.
அப்படத்தில் பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ப்ரியாஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் பிசியாக இருக்கிறார் என்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக வராது என்று சிலர் கருத்து சொல்ல, அவரை படத்திலிருந்து தூக்கி விட்டனர்.
அதனால் அவருக்குப்பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணியிருக்கிறார்கள்.
ஊதாக்கலரு இப்போது ராசியான கலர் தான் போல..
ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமே ஹிட் என்பதோடு, அப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலும் ஹிட் ஆனதால், அதே பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
இனியென்ன கலக்கல் தான்.
4,243 Views