பிக்பாஸ் 2 வீட்டில் இன்று இரவு பெரிய சண்டை இருக்கு போல..அடடா ஜாலி . பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா கொஞ்சம் அமைதியாக இப்போதெல்லாம் வலம் வருகிறார்.எனவே பெரிதாக எந்தச் சண்டையும் இல்லை.புலி பதுங்குவது பாயத்தான் .எனவே பொறுத்திருந்து பாப்போம்.
இந்நிலையில் இன்று ஒரு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது .
அதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் விளையாடுகிறார் மஹத் . அப்போது எதிரணியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை தள்ளிவிட்ட மஹத், டேனியையும் பிடித்துத் தள்ளி விடுகிறார் . இதை பார்த்த டேனிக்கு கோபம் வந்து தள்ளாதடா... எதுக்கு நீ மேல கையை வைக்கிறாய் என்று கேட்டார். உடனே மஹத் விளையாட்டை விட்டுவிட்டு வந்து டேனியுடன் மோதி சண்டை போடுகிறார்.
அதிலும் வா, வா பார்த்துவிடலாம் என்று மஹத் கோபமாக சொல்ல டேனியோ போடா என்று கூறினார். என்னமோ காணொளியைப் பாத்தா சண்டை பலம் போல தான் இருக்கு ...
ஆனால் ஆர்வமா நிகழ்ச்சியைப் பார்த்தா ஒரே சிரிப்பு சிரிப்பா வரும்.எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.