Sooriyan Gossip - சீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,267 Views
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ரஸ்யா போன்ற மேலைத்தேய நாடுகளுக்கு இணையாக, விண்வெளி ஆராச்சியில் தனது திறமைகளை காட்டும் போட்டியில் குதித்துள்ளது சீனா. இந்தநிலையில், அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராச்சியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்புடன் சர்வதேச விண்வெளி நிலையமொன்று இயங்கிவரும் நிலையில், தமக்கென விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தற்போது அதி தீவிரமான முன்னெடுப்புக்களை சீனா மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் 29ம் திகதி LONG MARCH-5B என்ற உந்துகணை ஒன்றின் மூலம் கட்டுமான விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியிருந்தது சீனா.
குறித்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையின் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்புகையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது அந்த உந்துகணை. இதன்காரணமாக, எந்தவேளையிலும் அதன் பாகங்கள் பூமியில் விழும்நிலை காணப்பட்டது. அதிலும் சரியாக எந்தப் பகுதியில் விழும் என்று கணிக்க முடியாத ஆபத்து நிலையும் உருவானது.
உலகமே இந்த ஆபத்துக் குறித்து அதிர்ச்சியில் இருக்க, கட்டுப்பாட்டை இழந்த அந்த உந்துகணை வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வர ஆரம்பித்தது. இது குறித்து சீன விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில், 18 டொன் எடை கொண்ட உந்துகணையின் பெரும்பாலான பாகங்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகங்கள் பூமியை வந்தடையும் என்றும் தெரிவித்திருந்தனர்.
சீன விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பின்படி, நேற்றையதினம் மாலைதீவுக்கு அண்மித்த இந்து சமுத்திரப் பகுதியில் சீனாவின் விண்ணோடத்தின் பாகங்கள் வீழ்ந்ததன் மூலம் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த உலக நாடுகள் அமைதியடைந்துள்ளன.