தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படம் வயதில் தனக்கு மூத்த ஒரு பெண்ணின் மீது காதலில் விழுவது போன்ற கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நயன்தாராவின் 41 ஆவது பிறந்தநாளான இன்று ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.