முன்னணி IT நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களின் கணினி செயற்பாடு மற்றும் App பயன்பாட்டைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது.
அதாவது, ஊழியர் ஒருவர் அலுவலக கணினியில் Mouse அல்லது Keyboardஐ 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் வைத்திருந்தால், அவர் வேலை செய்யாதவராக கருதப்படுவார்.
15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், குறித்த ஊழியர் மற்ற வேலைகளில் தீவிரமாக செயற்படுவதாக கருதப்படுவார்.
இதற்காக ProHance போன்ற சிறப்பு Tracking கருவிகளை அந்நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
இந்தக் கண்காணிப்பு மென்பொருள்தான் ஊழியரின் வேலைப் பழக்கத்தை நிமிடக் கணக்கில் துல்லியமாகப் பதிவு செய்யப் போகிறது.
இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர் திட்டங்களில், ஊழியர்களின் மடிக்கணினி செயற்பாடு, செயலி பயன்பாட்டை ProHence போன்ற கருவிகள் மூலம் கண்காணிக்க இப்போது பயிற்சி வழங்கப்படுவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.