இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’.
இதில், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருப்பதோடு, இத்திரைப்படம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் First Single இந்த வாரம் வெளியாகும் என்று ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.