நடிகர் விக்ரம் அடுத்ததாக தன்னுடைய 63ஆவது திரைப்படத்திற்கு தயாராகி வரும் நிலையில், இத்திரைப்படத்தை, தன்னுடைய முதல் திரைப்படமான 'மண்டேலா' திரைப்படத்திலேயே தேசிய விருதை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார்.
தற்போது வரை இந்தத் திரைப்படத்தின் கதை மற்றும் நடிக்கும் நடிகர்கள் பற்றிய பிற விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இது உலகளாவிய இரசிகர்களை ஈர்க்கும் திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 'GOAT ' திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்திரி நடிக்க உள்ளாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.