கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரின் நடிப்பில் வெளியான 'Tanu Weds Manu Returns' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தது. இந்தநிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பின்பு பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதேவேளை மாதவன், கங்கனா ரனாவத் இருவரும் இணைந்து 'சர்க்கிள்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.