சீனாவின் சாங்-இ 5 விண்கலம் நிலவிலிருந்து கொண்டு வந்த மண்ணை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இதுவரை பூமியில் காணப்படாத 2 புதிய வகை தாதுக்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த தாதுக்கள் வெறும் கண்ணால் பார்க்கவே முடியாத அளவுக்கு மிக நுணுக்கமானவை.
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளில் இதுவரை இல்லாத வகையில் 7-வது, 8-வது புதிய தாதுக்களாக இவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேக்னீசியோ-சேஞ்சசைட்-(Y), சேஞ்சசைட்-(Ce) இவை அரிய வகை தனிமங்களைக் கொண்டிருந்தாலும், இவை மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் இப்போதைக்கு நிலவில் சுரங்கம் அமைப்பது சாத்தியமில்லை என்றாலும் நிலவின் வரலாற்றை அறிய இவை முக்கிய ஆதாரங்கள் சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு நிலவு குறித்து இதுவரை வைத்திருந்த பல கணிப்புகளை மாற்றியுள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருகிய குழம்பாக இருந்த நிலவு, எப்படி குளிர்ந்து அடுக்குகளாகப் பிரிந்தது என்பதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன.