16 Views
அந்த வரிசையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி இரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் வெளியாகும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், ‘ரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ரன்’ திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியாகிறது. இதனால் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் ‘ரன்’. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.