Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
வசூல் வேட்டையில் தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்'

SOORIYAN GOSSIP - வசூல் வேட்டையில் தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
"சம்பவம் செய்றவன பார்த்திருப்ப... அதுல ரெக்கார்டு வைக்குறவன பார்த்திருக்கியா?" ஜன நாயகன் திரைப்படத்தின் இந்த வசனம் வெறும் திரைக்கதைக்காக எழுதப்பட்டது அல்ல, அது தளபதி விஜய் என்ற வசூல் சாம்ராட்டுக்காக எழுதப்பட்ட கட்டியம்! 

2026ஆம் ஆண்டு தமிழ் சினிமா பல படங்களைக் கண்டிருந்தாலும், வசூல் வேட்டையில் இதுவரை இந்திய மதிப்பில் 315 கோடி ரூபாய் குவித்து சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' தான். அதற்கு அடுத்தபடியாக 'கருப்பு' திரைப்படம் இந்திய மதிப்பில் 310 கோடி ரூபாயும், 'பராசக்தி' திரைப்படம் இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாயும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

படம் திரைக்கு வருவதற்கு முன்பே சுற்றிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். இணையத்தில் படம் லீக் ஆகி, "கோடி பேர் மொபைலிலேயே பார்த்துட்டாங்க, இனி யார் தியேட்டருக்கு வரப் போறாங்க?" என்று கேலியும் கிண்டலும் பேசி சிரிக்க, அத்தனை கேலிகளுக்கும் திரையரங்க வாசலில் திரண்டு எழுந்த இரசிகர்களின் ஆரவாரமே பதிலடி கொடுத்தது.

அனைத்து சவால்களையும் 18 நாட்களில் தூள் தூளாக்கி, இதுவரை இந்திய மதிப்பில் 315 கோடி ரூபாய் வசூலித்து 2026-ன் அதிஉச்ச வசூல் சாதனையை ஜன நாயகன் படைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல!

இன்னொரு புறம் இந்திய மதிப்பில் 310 கோடி வசூலித்து சாதனை படைத்த 'கருப்பு' திரைப்படத்திற்கு ஒரு தனித்துவமான சிறப்பு உண்டு. தளபதி விஜய் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, கையெழுத்திட்டு வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையே அது! சினிமா நாயகனாகக் கொண்டாடிய தங்கள் தலைவனை, ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பார்த்து ரசித்த அந்த நொடி, விஜய் ரசிகர்களுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த உணர்வுப் பூர்வமான அனுபவம்.

உண்மையில், சென்சார் பிரச்சனைகள் எழாமல் இருந்திருந்தால், இந்நேரம் 'பராசக்தி' திரைப்படத்தோடு 'ஜன நாயகன்' களம் கண்டிருக்கும். ஒருவேளை இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தால், அந்த நேரடிப் போட்டி தந்த விறுவிறுப்பில் 'பராசக்தி' சுலபமாக 100 கோடி கிளப்பில் இணைந்திருக்கும். அதே நேரத்தில், போட்டிக் களம் தந்த மாஸ் ஹைப்பினால் 'ஜன நாயகன்' படத்தின் வசூல் தற்போதைய எல்லையையும் தாண்டி எங்கேயோ கற்பனைக்கு எட்டாத ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டிருக்கும்!

எத்தனை தடைகள் வந்தாலும், "தளபதி படம்னா அது தியேட்டர்லதான் பார்க்கணும்!" என்ற இரசிகர்களின் கட்டுக்கோப்பான அன்பை யாராலும் அசைக்க முடியாது. வசூல் சாம்ராஜ்யத்தின் ஒரே மன்னன் தளபதி விஜய் தான் என்பதை 2026 இன் இந்த வசூல் சாதனை மீண்டும் உரக்கச் சொல்லியிருக்கிறது!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top