வசூலை அள்ளிக்குவிக்கும் சூரியின் மண்டாடி!சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், மாமன் என தொடர்ந்து Hit திரைப்படங்களின் வரிசையில் தற்போது மண்டாடியும் இணைந்துள்ளது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
மண்டாடி திரைப்படம் வெளியான நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வெளியாகி 15 நாட்களில் மண்டாடி திரைப்படம்
இந்தியப்பெறுமதிப்படி 113 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.