சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் \\\'ஜெயிலர் 2\\\' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி, திரைப்பட ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'One Sun One Moon' வரும் செப்டம்பர் 25ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத்தின் துள்ளலான இசையமைப்பில் உருவாகும் இப்பாடல், ரஜினி ரசிகர்களுக்கு மற்றொரு மிகப்பெரிய இசை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. \\\'ஜெயிலர்\\\' திரைப்படத்தின் முதல் பாகத்துப் பாடல்கள் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி வெளியாகவுள்ள \\\'One Sun One Moon\\\' பாடலைக் கொண்டாடச் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் இசைப் பிரியர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.