ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) இடம்பெறும் பிரபலமான T20 கிரிக்கெட் தொடரான ILT20(International League T20) போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன.
குறித்த தொடரானது இன்றைய தினம் ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இத்தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ILT20இல் ஒவ்வொரு அணியும் தலா 10 லீக் போட்டிகளில் விளையாடுவதோடு, மொத்தமாக 34 போட்டிகள் இடம்பெறவுள்ளன.