70 Views
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஊழியர்கள் பரிசுப் பெட்டிகளைத் திறந்து பார்ப்பது பதிவாகியுள்ளது. அந்தப் பெட்டிகளில் திருமண அழைப்பிதழ்கள், chocolate மற்றும் தங்க மோதிரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்ததாகவும், அதற்குப் பதிலாகத் தங்க மோதிரங்கள் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் ஊழியர் ஒருவர் காணொளியில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் காவ்யா மாறனும் நவம்பர் 11ஆம் திகதி கிரேக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர் .இதனைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கான அழைப்பிதழில் நவம்பர் 25ஆம் திகதி மதிய விருந்துக்கான விபரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .ஊழியர்களுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.