Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படம்!

SOORIYAN GOSSIP - 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
தமிழ்த் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் 'ஷங்கர்'  இயக்கத்தில், 1993ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் 'கே.டி. குஞ்சுமோன்' தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்ததுடன், மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 
வெளியான காலப்பகுதியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்த இத்திரைப்படம், இன்றளவும் இரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பழைய திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றி மீள்திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி உலகளாவிய ரீதியில் இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. திரைப்பட இரசிகர்கள் மத்தியில் இவ்வறிவிப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, 1990களில் இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்த இரசிகர்களுக்கு மீண்டும் பழைய நினைவுகளை மீட்டும் வாய்ப்பாகவும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அக்காலகட்டத்தின் வெற்றித் திரைப்படமொன்றைத் திரையரங்கில் காணும் சந்தர்ப்பமாகவும் இந்த மீள்திரையிடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெளியாகவுள்ள ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்புக் கிடைக்கப்போகிறது என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top