தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது.
இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 3ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கின. குறித்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்தத் தோல்வியினால் உலக Test Championship புள்ளி பட்டியலின் முதல் இடத்தை அவுஸ்திரேலியா இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் தென்னாபிரிக்க அணி 2ஆவது இடத்திலும் அவுஸ்திரேலியா அணி 3ஆவது இடத்திலும் உள்ளன.