ஐ.சி.சி ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான குழுநிலை மற்றும் போட்டி அட்டவணை நேற்று (01) வெளியிடப்பட்டது.
இதில் இலங்கை அணி குழு B இல் இடம்பிடித்துள்ளதுடன், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளும் குழு B இல் இடம்பிடித்துள்ளன. இந்த அணிகளுடன் உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றாக கருதப்படும் சுப்பர் சீரிஸில் வெற்றிபெற்று தகுதிபெறும் ஒரு அணியொன்றும் இந்த குழுவில் இடம்பிடிக்கும்.