எதிர்காலத்தில் மனிதர்களால் செயற்கை நுண்ணறிவை வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கை நுண்ணறிவு குறித்த சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழு, AI தொடர்பாக இன்னும் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் என தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவற்றுக்கான தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகள் போதுமானதாக இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அறிவியல் குழு எச்சரித்துள்ளது. பயனர்களுக்குப் பதிலாக தானாகவே பணிகளைச் செய்யும் AI ஏஜெண்டுகள், மனித கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு செயற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenAI மேற்கொண்ட சோதனையின்போது AI ஏஜெண்டுகள் Hugging Face தளத்தில் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. AI தொழில்நுட்பம் மேலும் தன்னிச்சையாகவும், கண்காணிக்க கடினமாகவும் மாறுவதால், அதற்கேற்ப வலுவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.