62 Views
பெண்கள் கிரிக்கெட்டில் இன்னொரு வரலாற்றுப் பக்கம் எழுதப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் .
இலங்கைக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மந்தனா, 45 பந்துகளில் 79 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தார். இந்த போட்டியின் போது 11,000 சர்வதேச ஓட்டங்கள் என்ற மாபெரும் மைல்கல்லையும் அவர் எட்டினார்.
இதன் மூலம் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ள மந்தனா, ஏற்கனவே மிதாலி ராஜின் அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்த நிலையில், தற்போது 11,000 ஓட்டங்களை கடந்துள்ளார். மந்தனாவின் இந்த அதிரடி ஆட்டமும் சாதனையும் இரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.