எலான் மஸ்க்கிற்கு சொந்தமான XChat செயலியில், பயனர்கள் எளிதாக செய்தி அனுப்பவும் அழைப்புகளை மேற்கொள்ளவும் ‘X Numbers’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், தொலைபேசி எண்ணைப் பகிராமல் தனிப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அந்தக் குறியீட்டை பெற்றவர்கள், பயனர் அவர்களைப் பின்தொடராவிட்டாலும் நேரடியாக Inbox-க்கு செய்தி அனுப்ப முடியும்.
மேலும், X Numbers வசதி விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தக்கூடியதாகும். இது XChat-இன் வழக்கமான Message Request முறையை மாற்றாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.