நடிகர் ஆர்யா மீண்டும் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (நவம்பர் 23) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஆர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா, முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் ‘பிரணய விலாசம்’ திரைப்படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே வெளியான ‘கண்ணும் கண்ணும்’, ‘நிறைவே’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழில் ‘ஹலோ காதல்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஹலோ பிரேமா’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவுள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளதால், ஆர்யாவின் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிசம்பர் 4ஆம் திகதி வெளியாகவுள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னரே தெரியவரும்