சூரியன் எப்.எம். இன் 17 ஆவது பிறந்த தினம் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு நேயர்களுடன் கொண்டாடப்பட்டமை சிறப்பம்ச மாகும்.
மேலும் பிறந்த நாளையொட்டி மெகா பிளாஸ்ட் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறை 4 இந்திய இசைக்கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். மேலும் விசேட மேடை, வானவேடிக்கை என பல அம்சங்களை இந்நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது.