துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வெளியான திரைப்படம் 'காந்தா'. இத்திரைப்படம் இரசிர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் இரசிகர்களைக் கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், இரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு நடிகர் தனுஷை மிகவும் பிடிக்கும் என நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு தனுஷை மிகவும் பிடிக்கும். எல்லா நடிகைகளுக்கும் தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருக்கும்.
எனக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கு. விரைவில் தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.