தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த 'RRR' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் இவர்கள் இருவரும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்புதிய திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ரஜினி - கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள multi Star திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.