48 Views
இந்த ஆண்டில் Osaka வுடன் மோதிய முந்தைய மூன்று போட்டிகளிலும் Sabalenka வெற்றி பெற்றிருந்தார். இதில் கடந்த மாதம் நடைபெற்ற French பகிரங்க போட்டியின் இதே சுற்றில் பெற்ற வெற்றியும் அடங்கும்.
2019 ஆம் ஆண்டு Beijing இல் ஆஷ் பார்ட்டியை வீழ்த்திய பிறகு உலகின் முதல் நிலை வீராங்கனை ஒருவரை Osaka வென்றது இதுவே முதல் முறையாகும்.
அந்த வெற்றிக்குப்பிறகு ஒரு காலத்தில் முதல் நிலையில் இருந்த Osaka , தனது மனநலனைப் பேணுவதற்காக 2021ஆம் ஆண்டில் இடம்பெற்ற போட்டிகளில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார் .பின்னர் மகப்பேறு விடுப்பு காரணமாக 2023ஆம் ஆண்டு முழுவதும் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.