தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால் இரசிகர்களின் கவனம் முழுவதுமாக அதன் மீது திரும்பியுள்ளது.
U/A சான்றுதல் தொடர்பான நடைமுறைகள் காரணமாக ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ள நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தளத்தில்
கசிந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் திரைப்படத் துறையினரையும், இரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 'ஜன நாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.