அறிமுக இயக்குநர் சாகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் Teaser ஐ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜோன் விஜய், தேஜு அஸ்வினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார்.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் எதிர்வரும் 12ம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.