‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.
இவரின் இயக்கத்தில் உருவான 'வம்சம்', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , 'தலைவன் தலைவி போன்ற திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவர் ‘பரிமளா & கோ’ என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘வாச்சா உடாத’ Vedio பாடல் வெளியானது.
இத் திரைப்படத்தின் Trailer இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படம் June மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.