RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள் மற்றும் கருப்பசாமி வழிபாட்டை மையமாகக் கொண்ட கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய பெறுமதிப்படி இதுவரை கருப்பு திரைப்படம் 165 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது, இந்நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கும் கருப்பு திரைப்படம் June மாதம் 22ஆம் திகதி நீக்கப்பட்ட காட்சிகளுடன் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.