ஆர். ஜே. பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 15-ஆம் திகதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், பல தடைகளை கடந்து இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தில், பாடல் காப்புரிமை தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்வது குறித்து ஒரு காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையான நிலையில், தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
"கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.