Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
'மூக்குத்தி அம்மன் 2' வெளியாவது எப்போது?

SooriyanFM Gossip - 'மூக்குத்தி அம்மன் 2' வெளியாவது எப்போது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் திரைப்படத்தில், நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார். 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோருடன் யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தத் திரைப்படபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரைப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கான கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தயாரிப்புத் தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top