72 Views
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜாவின் 77வது திரைப்படமான ' இருமுடி ' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
இயக்குநர் சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் , மைத்ரி Movie makers நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘இருமுடி’ படத்தின் First Look போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில், ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ரவி தேஜா காட்சியளித்திருந்தார்.
இந்த புதிய தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது . இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தினுடைய " இருமுடி கட்டு" என்ற முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் அனந்த் பாடியுள்ளார்.