38 Views
உதட்டில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டால், சுத்தமான துணியால் 5–10 நிமிடங்கள் மென்மையாக அழுத்தம் கொடுத்து முதலில் இரத்தத்தை நிறுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வீக்கத்தை குறைக்க துணியில் சுற்றிய ஐஸ் கட்டிகளை சில நிமிடங்கள் ஒத்தடமாக வைப்பதுடன், காயத்தை சுத்தமான தண்ணீரால் மெதுவாக சுத்தம் செய்து உதட்டை ஈரப்பதமாக வைத்திருப்பதும் அவசியம்.
10–15 நிமிடங்களுக்கும் மேலாக இரத்தப்போக்கு நீடித்தாலோ, ஆழமான காயம், கடுமையான வலி, அதிக வீக்கம், காய்ச்சல் அல்லது சீழ் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.