90 காலகட்டத்தில் பொலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கோவிந்தா.
அவருடனான முரண்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அந்த விவாகரத்து மனுவை தற்போது கோவிந்தா மனைவி மீளப் பெற்றுள்ளார்.
இனி சட்டத்தை மீறி கோவிந்தா செயற்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வருமென சுனிதா அஹூஜாவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.