இரவு வேளையில் உணவு உட்கொண்ட பின் எமது வாய்ப் பகுதியின் ஆரோக்கியம் குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உணவுக்குப் பின் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதற்கும் ஏலக்காய் மிகச்சிறந்த தீர்வாகும்.
ஆகவே, இரவு உணவுக்குப் பின் ஏலக்காயை உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு...
● வயிறு வீக்கம், அமிலம் சுரத்தல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும்.
● உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
● இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும்.
● சமிபாட்டு மண்டலத்தை மேம்படுத்தி வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இயற்கை மருந்தாகச் செயல்படும்.
● இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.