இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் செளரவ் கங்குலி 2027, ஐ.பி.எல் பருவக்காலத்திற்கான டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, 2019 முதல் டெல்லி கெபிட்டல்ஸ் அணி ஆலோசகராக பணியாற்றியுள்ள செளரவ் கங்குலி. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
டெல்லி கெபிட்டல்ஸ் அணி நிர்வாகம் இவரின் நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.