நரம்பு தளர்ச்சி என்பது உடலின் நரம்புகள் பலவீனமடைவது அல்லது பாதிப்படைவதைக் குறிக்கிறது. நமது மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்புகள் சேதமடைவதால், உணர்ச்சியிழப்பு, தசை பலவீனம் அல்லது உடலின் இயல்பு வாழ்க்கையில் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான Vitamin B12 மற்றும் பிற Vitamin உடலில் குறைவாக இருப்பது காரணமாகும். அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் கட்டுப்பாடில்லாமல் அதிகமாக இருக்கும்போது நரம்புகள் சேதமடைகின்றன. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், கவலை மற்றும் சீரான தூக்கமின்மை நரம்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
அதிகப்படியான மது அருந்துதல் நரம்புகளுக்கு நஞ்சாக அமைந்து B12 சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும்.
இந்த பிரச்சினைக்கு
தினமும் 1 அல்லது 2 அவித்த முட்டை (மஞ்சள் கருவுடன்) சாப்பிடலாம்.
வாரத்தில் 2-3 நாட்கள் மத்தி, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த மீன்களை உணவில் சேர்க்கலாம்.
சைவ உணவு உண்பவர்கள் தினமும் 1-2 டம்ளர் பால் அல்லது பசுந்தயிர் தவறாமல் சேர்த்துக்கொள்ளவும். அல்லது தினமும் இரவில் 5 பாதாம் மற்றும் 2 வால்நட் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தோலை உரித்துச் சாப்பிடலாம்.
இவ்வாறான உணவுகளை உட்கொள்வதால் நரம்பு தளர்ச்சியினை
கட்டுப்படுத்த முடியும் .