பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால் உணவு சமிபாடடைய உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு பேரீச்சம்பழம் நல்ல தீர்வைத் தருகிறது.
சருமம் பளபளப்பாகவும், கண் பிரச்சினைகள் வராமல் தடுக்கவும், இருமல் போன்ற நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பேரீச்சம்பழம் திகழ்கிறது. தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால் இரத்த சுரப்பை மேம்படுத்தி உடலுக்கு பலம் சேர்க்கிறது. மேலும் தோலின் ஆரோக்கியத்தை உயர்த்தி நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதை குறைக்கிறது.
தினமும் இரவில் பாலில் 3 அல்லது 4 பேரீச்சம் பழங்களை ஊற வைத்து காலையில் அதை அப்படியே அல்லது சிறிது சூடாக்கிக் குடித்து வந்தால் உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கிறது.