சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும் பூண்டு உணவின் சுவையை அதிகமாக்கும் பதார்த்தங்களில் முக்கியமானதொன்றாகும்.
ஏராளமான மருத்துவக் குணங்கள் பூண்டில் இருந்தாலும் சில ஆரோக்கியப் பிரச்சினைகளைக் கொண்ட நபர்கள் பூண்டு சாப்பிடுவதைக் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே, பூண்டு உண்பதைத் தவிர்க்க வேண்டியவர்கள் யாவர் என்பதைப் பார்க்கலாம்...
● பாலூட்டும் தாய்மார்கள்.
● இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள்.
● குறைவான இரத்த அழுத்தம் கொண்டவர்கள்.
● அல்சர் பிரச்சினை உடையவர்கள்.
● பூண்டு ஒவ்வாமை ஏற்படுபவர்கள்.
மேல் குறிப்பிட்ட விடயங்களுக்குள் உள்ள நபர்கள் பூண்டு உண்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், இல்லையேல் உடலின் நிலைமை மோசமாக வாய்ப்புண்டு.