64 Views
முதலில் துடுப்பெடுத்தாடிய மீரட் அணி அதிரடியாக ஓட்டங்களை குவித்தது. குறிப்பாக திவ்யான்ஷ் ஜோஷி அபார சதம் அடித்து அணியின் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு அடித்தளம் அமைத்தார். இதனால் லக்னோ அணிக்கு கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய லக்னோ பால்கன்ஸ் துடுப்பாட்டத்தில் தடுமாறியது. மீரட் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், லக்னோ அணி இலக்கை எட்ட முடியாமல் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மீரட் மேவரிக்ஸ் UP T20 கிண்ணத்தை மீண்டும் தனதாக்கியது.