கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.நேற்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்தசியா ஜகாரோவா உடன் மோதினார்.இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.