19 Views
கொழும்பில் உள்ள SLTA Courtsஇல் ஓகஸ்ட் 27 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் 3ஆம் நாள் போட்டிகள் ஓகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்றன.
முதல் கட்டப் போட்டிகளில் Kandy Kings, Negombo Icons, Kurunegala Royals மற்றும் Jaffna Flamingos ஆகிய அணிகள் வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ளன. இதனால் அணிகளுக்கிடையிலான போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.
நாளை ஓகஸ்ட் 30ஆம் தேதி தொடரின் இறுதி நாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், வெற்றிக் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் டென்னிஸ் விளையாட்டுக்கு புதிய உத்வேகம் கொடுக்கும் இந்தத் தொடரின் இறுதி நாள் ஆட்டங்கள் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன!