இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
குறித்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் 2 இன்னிங்ஸ்களிலும் LBW முறையில் ஆட்டமிழந்ததன் மூலம் ஒரே டெஸ்ட் சீசனில் அதிக முறை LBW முறையில் ஆட்டமிழந்த தனது மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.
ஏற்கனவே, 2016-2017ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆசிய சுற்றுப் பயணத்தில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஜோ ரூட் 7 தடவை LBW முறையில் ஆட்டமிழந்ததே அவருடைய மோசமான சாதனையாக இருந்தது.
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெறும் 9 இன்னிங்ஸ்களிலேயே 7 தடவை LBW முறைப்படி ஆட்டமிழந்ததன் மூலம் ஏற்கனவே தான் படைத்த மோசமான சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோ ரூட்.