இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது.
இந்தத் தொடரில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சொனால் தினூஷ மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் அடித்ததன் மூலம், 26 வருட காலமாக சிம்பாபேயின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான Andy Flower தன் வசம் வைத்திருந்த சாதனையை சொனால் தினூஷ சமன் செய்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இலங்கை அணிக்குப் புதிய இளம் துடுப்பாட்ட வீரர் கிடைத்துவிட்டார் என இரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.